இந்தியா முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? பிரதமர் மோடி எடுக்கும் முடிவு என்ன?

0
இந்தியா முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? பிரதமர் மோடி எடுக்கும் முடிவு என்ன?
இந்தியா முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? பிரதமர் மோடி எடுக்கும் முடிவு என்ன?

இந்தியாவில் கொரோனா பரவல் கடந்த சில நாட்களாக நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வருகிறது. மேலும் தலைநகர் டெல்லி, தமிழகம், மத்திய பிரதேசம், கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதனால் நாட்டில் மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முழு ஊரடங்கு அமல்

இந்தியாவில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் தென்னாப்பிரிக்காவில் உருவான ஓமைக்ரான் வைரஸ் காரணமாக வேகமெடுக்கத் தொடங்கியது. அதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்த தேவைப்பட்டால் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி கொள்ளலாம் என்று பரிந்துரைத்தது. அதன்படி இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு வகையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து கொரோனா பரவல் கட்டுக்குள் வரவழைக்கப்பட்டு கடந்த மாதம் 31ம் தேதி அன்று அனைத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளையும் திரும்ப பெறுவதாக அறிவித்தது.

Exams Daily Mobile App Download

இந்த நிலையில் அண்டை நாடுகளில் கொரோனா பரவல் அதிகமாகி கொண்டு வருகிறது. அத்துடன் ஜூன் மாதத்தில் கொரோனா பரவலின் 4ம் அலை பரவத் தொடங்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தற்போது ஓமைக்ரான் வைரஸின் உருமாற்றம் அடைந்த எக்ஸ்இ வைரஸ் உலகின் பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. மேலும் இந்த புதிய வைரஸ் ஓமைக்ரான் வைரஸை விட 2 மடங்கு வேகமாக பரவும் என்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளன. அத்துடன் தற்போது பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது.

CBSE பள்ளி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – 48 நாட்கள் கோடை விடுமுறை!

இதில் குறிப்பாக தலைநகர் டெல்லி, தமிழகம், மத்திய பிரதேசம், கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்த கேரளா, டெல்லி, தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயமாக அணிய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படலாம் என்று தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும் இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here