தமிழகத்தில் மீண்டும் அமலாக உள்ள முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள்? அமைச்சரின் பேட்டி!

0
தமிழகத்தில் மீண்டும் அமலாக உள்ள முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள்? அமைச்சரின் பேட்டி!
தமிழகத்தில் மீண்டும் அமலாக உள்ள முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள்? அமைச்சரின் பேட்டி!
தமிழகத்தில் மீண்டும் அமலாக உள்ள முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள்? அமைச்சரின் பேட்டி!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தற்போது கணிசமாக குறைந்துள்ளது. ஆனால் அண்டை மாநிலங்கள் மற்றும் பல்வேறு நாடுகளில் புதிய வகை கொரோனா பரவி வருவதால் பொதுமக்கள் முகக்கவசம் அணிவது இன்றியமையாததாகும். மேலும் இது தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதை பற்றி விரிவாக பார்ப்போம்.

முழு ஊரடங்கு

தமிழகத்தில் ஓமைக்ரான் தொற்று பரவல் காரணமாக கொரோனா பரவலின் 3ம் அலை வேகமெடுத்தது. தற்போது பல கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு கட்டுக்குள் வரவழைக்கப்பட்டுள்ளது. அத்துடன் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது. அதனால் தமிழகத்தில் தற்போது 2 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது அனைத்து துறைகளிலும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.

தமிழகத்தில் இன்றும், நாளையும் மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

இந்த நிலையில் அண்டை மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அத்துடன் உலகின் பல்வேறு நாடுகளில் ஓமைக்ரான் வைரஸின் உருமாற்றம் அடைந்த புதிய திரிபான எக்ஸ்இ வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இது கடந்த ஜனவரி மாதம் இங்கிலாந்தில் முதன் முதலில் கண்டறியப்பட்டது. இது ஓமைக்ரான் வைரஸை விட 10% வேகமாக பரவும் தன்மை கொண்டது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதனால் தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது தமிழகத்தில் பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணியாமல் இருக்கின்றனர்.

தமிழக அரசு துறைகளில் உள்ள லட்சக்கணக்கான காலிப்பணியிடங்கள் – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

இது தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிக்க ஒரு வாய்ப்பு ஏற்படுத்துகிறது. இதனால் தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படலாம். இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது, தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை இன்னும் சில மாதங்களுக்கு பின்பற்ற வேண்டும் என்றும், அத்துடன் முகக்கவசம் அணிவதற்கு விலக்கு அளிக்கப்படவில்லை. மேலும் பொது மக்கள் கட்டாயமாக பொது இடங்களில் முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளி, கைகளை கழுவுதல் போன்ற கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here