மாநிலத்தின் ஒரு சில நகரங்களில் முழு ஊரடங்கு அமல் – வன்முறை எதிரொலி!

0
மாநிலத்தின் ஒரு சில நகரங்களில் முழு ஊரடங்கு அமல் - வன்முறை எதிரொலி!
மாநிலத்தின் ஒரு சில நகரங்களில் முழு ஊரடங்கு அமல் - வன்முறை எதிரொலி!
மாநிலத்தின் ஒரு சில நகரங்களில் முழு ஊரடங்கு அமல் – வன்முறை எதிரொலி!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் ராம நவமி ஊர்வலத்தின் போது கற்கள் வீசப்பட்டதை தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தை முன்னிட்டு மூன்று முக்கிய இடங்களில் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் தகவல்களை இப்பதிவில் காணலாம்.

முழு ஊரடங்கு

மத்தியப் பிரதேசத்தின் கார்கோன் நகரில் நேற்று (ஏப்ரல்.10) நடைபெற்ற ராம நவமி ஊர்வலத்தின் போது கற்கள் வீசப்பட்டு, சில வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவங்களையடுத்து இந்த நிலைமையை கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து அம்மாநிலத்தின் மூன்று முக்கிய பகுதிகளில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக CrPC இன் பிரிவு 144ன் கீழ் முழு ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக ரூ.10000 வரை கடன் பெறும் பிரதமர் ‘ஜன் தன் யோஜனா’ திட்டம் – முழு விபரங்கள் இதோ!

இதற்கு முன்னதாக அந்த ஊர்வலத்தின் ஆரம்பத்திலேயே கல் வீச்சு தொடங்கிய நிலையில் இந்த கலவரத்தில் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட நான்கு பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல நான்கு வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டதையடுத்து, அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இது குறித்து மாவட்ட நீதிபதி எஸ்.எஸ்.முஜல்தா கூறுகையில், ‘தலாப் சௌக், கவுஷாலா மார்க், மோதிபுரா, பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பிற்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் 8ம் வகுப்பு படித்தவர்களுக்கு ரூ.62,000 சம்பளத்தில் அரசு வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

இதனை தொடர்ந்து கலவரம் குறித்து கர்கோன் மாவட்ட ஆட்சியர் அனுக்ரா பி கூறுகையில், ‘கர்கோன் காவல்துறை கண்காணிப்பாளர் சித்தார்த் சவுத்ரி மற்றும் இரண்டு காவல்துறை அதிகாரிகள் கல் வீச்சில் காயமடைந்தனர். இந்த கலவரத்தை தடுக்கும் விதமாக CrPC இன் பிரிவு 144ன் கீழ் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவது தடை செய்யப்பட்டு நகரம் முழுவதும் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி நகரில் உள்ள தலாப் சௌக் மற்றும் தாவடி உள்ளிட்ட மூன்று பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!