ஏப்ரல் 23 வரை முழு ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு – வன்முறை எதிரொலி! காவல்துறை நடவடிக்கை!

0
ஏப்ரல் 23 வரை முழு ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு - வன்முறை எதிரொலி! காவல்துறை நடவடிக்கை!
ஏப்ரல் 23 வரை முழு ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு - வன்முறை எதிரொலி! காவல்துறை நடவடிக்கை!
ஏப்ரல் 23 வரை முழு ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு – வன்முறை எதிரொலி! காவல்துறை நடவடிக்கை!

கர்நாடகாவின் ஹூப்ளி காவல் நிலையத்தில் கடந்த ஏப்ரல் 16 ஆம் தேதியன்று நடைபெற்ற கல் வீச்சு சம்பவத்தையடுத்து அங்கு முழு ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டது. இந்த கட்டுப்பாடுகள் இப்போது ஏப்ரல் 23 வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முழு ஊரடங்கு

கடந்த ஏப்ரல் 16 ஆம் தேதியன்று கர்நாடகா மாநிலத்தில் உள்ள பழைய ஹூப்ளி காவல் நிலையத்தில் கல் வீச்சு சம்பவம் ஒன்று நடந்தது. இதில் நான்கு போலீசார் காயமடைந்த நிலையில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு தொடர்பாக 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இதுவரை 134 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வன்முறையை தடுக்கும் விதமாக அந்நகரத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இப்போது ஹூப்ளி நகரில் விதிக்கப்பட்ட 144 தடை உத்தரவை கர்நாடக அரசு ஏப்ரல் 23 வரை நீட்டிப்பதாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.

ExamsDaily Mobile App Download

இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஹுப்பள்ளி-தர்வாட் போலீஸ் கமிஷனர் லாபு ராம், ‘ஏப்ரல் 16 அன்று இரவில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் சட்டம் ஒழுங்கு நிலைமை தொடர்பாக, நாங்கள் 12 வழக்குகளை பதிவு செய்துள்ளோம். இதில் 134 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் நடைபெற்ற பகுதியை கண்காணிக்கும் விதமாக தெற்கு சப்-டிவிஷனனின் வரம்புக்கு உட்பட்ட பகுதிகளில் ஏப்ரல் 23 காலை வரை 144 தடை உத்தரவு தொடரும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம், அகவிலைப்படி உயர்வு அமல் – வலுக்கும் போராட்டம்!

மேலும், கல் வீச்சு சம்பவம் தொடர்பில் நீதிமன்றக் காவலில் உள்ள மாணவர் ஒருவருக்கு பரீட்சை எழுத நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக ஆணையாளர் தெரிவித்திருக்கிறார். முன்னதாக பழைய ஹூப்ளி காவல் நிலையத்தில் நடைபெற்ற கல் வீச்சு சம்பவத்தில் ஒரு ஆய்வாளர் உட்பட நான்கு போலீசார் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த கர்நாடக அமைச்சர் சிஎன் அஸ்வத் நாராயணன், சட்டத்தை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!