தமிழகத்தில் ஜூலை 5க்கு பிறகு முழு ஊரடங்கு நீட்டிப்பு? முதல்வர் நாளை ஆலோசனை!
கொரோனா 2 ஆம் அலை தடுப்பு கட்டுப்பாடுகளாக தமிழகத்தில் ஜூலை 5 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த கட்டுப்பாடுகள் முடிவடைய இன்னும் ஒரு சில நாட்களே உள்ளதால் ஜூலை 5க்கு பிறகு புதிய தளர்வுகள் அளிப்பது குறித்த ஆலோசனையில் முதல்வர் முக ஸ்டாலின் நாளை (ஜூலை 2) ஈடுபட உள்ளார்.
ஊரடங்கு நீட்டிப்பு
தமிழகத்தில் கொரோனா பேரலை தடுப்பு நடவடிக்கையாக கடந்த மே 10 ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜூலை 5 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த பொது முடக்க காலத்தில் மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதன் படி கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள, 1 மற்றும் 2 ன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள 27 மாவட்டங்களில் அத்தியாவசிய கடைகள், அரசு அலுவலகங்கள், பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
Axis வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – இன்று முதல் கட்டணம் அதிகரிப்பு!
இந்த நிலையில் ஜூலை 5 வரை அமல்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கு உத்தரவு முடிவடைவதற்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில், ஜூலை 5 க்கு மேல் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக முதல்வர் முக ஸ்டாலின் நாளை (ஜூலை 2) ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
TN Job “FB
Group” Join Now
இதை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மருத்துவ குழுவினருடனும் மேற்கொள்ளும் ஆலோசனை கூட்டம் நாளை காலை 11 மணியளவில் தலைமை செயலகத்தில் நடைபெற உள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால், மதவழிபாட்டு தலங்கள் திறப்பது உள்ளிட்ட மேலும் சில தளர்வுகள் கொடுக்கப்படலாம் என கூறப்படுகிறது. எனினும் ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பான அறிவிப்புகள் முதல்வரின் ஆலோசனை கூட்டம் முடிவடைந்த பிறகு நாளை (ஜூலை 2) வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Prasanth kanagaraj