ஜூன் 30 வரை தளர்வுகளுடன் முழு ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!

0
ஜூன் 30 வரை தளர்வுகளுடன் முழு ஊரடங்கு நீட்டிப்பு - மாநில அரசு அறிவிப்பு!
ஜூன் 30 வரை தளர்வுகளுடன் முழு ஊரடங்கு நீட்டிப்பு - மாநில அரசு அறிவிப்பு!
ஜூன் 30 வரை தளர்வுகளுடன் முழு ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!

ஒடிசாவில் முழு நேர ஊரடங்கில் இருந்து தளர்வுகளை அளிக்க 2 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 6 முதல் 7 மாவட்டங்களில் தொடர்ந்து கட்டுப்பாடுகளை நீட்டிக்க அரசு முடிவெடுத்துள்ளது.

ஊரடங்கு தளர்வுகள்

கொரோனா 2 ஆம் அலை காரணமாக ஒடிசா மாநிலத்தில் விதிக்கப்பட்டிருந்த முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து தளர்வுகளை அளிக்க அரசு முடிவு செய்துள்ளது. அதன் படி அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் தளர்வுகள் அளிக்க உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை அமல்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

144 தடை உத்தரவுடன் ஜூன் 21 வரை கட்டுப்பாடுகள் நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!

மேலும் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் அறிவிக்கப்பட்ட முழு ஊரடங்கு தளர்வுகளின் அடிப்படையில் அத்தியாவசிய கடைகள் செயல்படுவதற்கு 2 மணிநேரம் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் வார இறுதியில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் ஜூன் 30 வரை தொடர உள்ளது.

மற்ற மாவட்டங்களில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளின் படி,
  • கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள 16 மாவட்டங்களில் அத்தியாவசியம் இல்லாத கடைகள் மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதிக்கப்படும்.
  • மேலும் 7 மாவட்டங்களில் மட்டும் வணிக வளாகங்கள் அனைத்தும் திறக்கப்படும்.
  • கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை கடைப்பிடிப்பதன் மூலம் உணவகங்கள் மற்றும் ஹோட்டல்கள் செயல்பட அனுமதிக்கப்படலாம்.
  • பணியாளர்களின் அலுவலக வருகைக்கு தளர்வுகள் அறிவிக்கப்படும்.
மாநிலம் முழுவதும் நீட்டிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளின் படி,
  • சமூக, அரசியல் மற்றும் மத கூட்டங்களுக்கு முழுமையான தடைகள் நீடிக்கும்.
  • மாநிலம் முழுவதும் உள்ள சினிமா அரங்குகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்.
  • கல்வி நிறுவனங்கள், ஜிம்கள் மற்றும் நீச்சல் குளங்கள் அனைத்தும் ஜூன் 30 வரை மூடப்பட்டிருக்கும்.
  • பாதிப்பு அதிகமுள்ள 20 மாவட்டங்களில் வார இறுதி பணி நிறுத்தம் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!