ஜூன் 1 முதல் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அமல் – அரசு முடிவு!

0
ஜூன் 1 முதல் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அமல் - அரசு முடிவு!
ஜூன் 1 முதல் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அமல் - அரசு முடிவு!
ஜூன் 1 முதல் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அமல் – அரசு முடிவு!

கடந்த சில மாதங்களாக முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் வைக்கப்பட்டிருக்கும் சீனாவின் நிதி மையமான ஷாங்காயில் ஜூன் 1 முதல் தளர்வுகளை அளிக்க நகர நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.

ஊரடங்கு தளர்வுகள்

சீனப் பெருநகரமான ஷாங்காயின் இரண்டு மாத கால ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து தற்போது படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் தலைநகர் பெய்ஜிங்கில் கொரோனா வழக்குகளின் எண்ணிக்கை குறைந்தாலும் நோய் பரவல் இயக்கத்தை வெகுவாக குறைக்க கட்டுப்பாடுகளை பின்பற்றவும் அரசு முடிவு செய்துள்ளது. இப்போது ஷாங்காய் நகரத்தில் அமலில் இருக்கும் ஊரடங்கு தொடர்புடைய கட்டுப்பாடுகளை ஜூன் 1ம் தேதி முதல் முடிவுக்கு கொண்டு வர அரசாங்கம் முடிவு செய்திருக்கிறது. இதற்கிடையில் கடந்த வாரத்தில் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டனர்.

தமிழகத்தில் கொரோனா அதிகரிப்பதையொட்டி மீண்டும் முழு ஊரடங்கு? பரபரப்பு கடிதம்!

தவிர ஷாங்காயில் வணிகங்கள் மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் பெரும்பாலான குடியிருப்பாளர்கள் தங்கள் வீட்டு வளாகங்களை விட்டு வெளியேற அனுமதிக்கப்படவில்லை. மேலும், பெரும்பாலான கடைகள் டெலிவரி செய்வதற்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இப்போது ஷாங்காயின் 25 மில்லியன் குடியிருப்பாளர்களில் பெரும்பான்மையானவர்கள் குறைந்த ஆபத்துள்ள பிரிவில் வசித்தாலும், அவர்கள் தொடர்ந்து விழிப்புடன் இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் பொது இடங்களில் முகக்கவசங்களை அணிவது மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிப்பது முக்கியம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இதற்கிடையில் நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை மேம்பட்டு வரும் நிலையில், சீனா தனது பூஜ்ஜிய கொரோனா கொள்கையை கண்டிப்பாக கடைபிடிப்பது உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரத்தை பேரழிவிற்கு உட்படுத்தியுள்ளது. மேலும் உலகளாவிய விநியோகச் சங்கிலிகளையும் சீர்குலைத்துள்ளது. இந்த பொருளாதார தாக்கம் தொடர்பாக நேற்று வெளியிடப்பட்ட தரவுகளில், ஏப்ரல் மாதத்தில் மட்டும் சீனாவின் தொழில்துறை நிறுவனங்களின் லாபம் ஆண்டுக்கு 8.5% சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 362 கொரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவாகியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!