இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? பிரதமர் மோடி அதிரடி எச்சரிக்கை!

0
இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? பிரதமர் மோடி அதிரடி எச்சரிக்கை!
இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? பிரதமர் மோடி அதிரடி எச்சரிக்கை!
இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? பிரதமர் மோடி அதிரடி எச்சரிக்கை!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போராட்டம் இன்னும் முடிவடையவில்லை என்றும், நாம் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி இன்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் தெரிவித்து உள்ளார்.

முழு ஊரடங்கு அமல்:

கொரோனா தொற்று பரவல் சற்று தணிந்து உலக நாடுகள் கட்டுப்பாடுகளை தளர்த்தி வந்த நிலையில் சீனா பல நகரங்களை முடக்கி வருகிறது.அதிக வேகத்துடன் பரவும் ஒமைக்ரானே பாதிப்பு அதிகரிக்க காரணம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தொற்று பரவலை கட்டுப்படுத்த, பல்வேறு நகரங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சீனாவை தொடர்ந்து, இந்தியாவிலும் கொரோனா விஸ்வரூபம் எடுத்து உள்ளது. தலைநகர் டெல்லி, தமிழகம், மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில், கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது. இதை அடுத்து, பல்வேறு மாநிலங்களில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. மேலும், முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்றும், அணியாதவர்களிடம் அபராதம் விதிக்கப்படும் என்றும் மாநில அரசுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்கள் கவனத்திற்கு – மோசமான தொடக்கத்திற்கு இதுதான் காரணம்?

இதையடுத்து பொது இடங்களில் தனிமனித இடைவெளியை கடைபிடிப்பதையும் கட்டாயமாக்கி உள்ளது. கொரோனா வைரஸ் தொற்று நிலவரம் குறித்து அனைத்து மாநில முதலமைச்சர்களுடன், பிரதமர் நரேந்திர மோடி, இன்று மதியம் காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில், மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் பூபேஷ் பெகால், பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான், உத்தர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், குஜராத் மாநில முதலமைச்சர் பூபேந்திர படேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது கொரோனா நெருக்கடியை இந்தியா சிறப்பாக நிர்வகித்து வருகிறது.

Exams Daily Mobile App Download

இருப்பினும், தற்போது பல்வேறு மாநிலங்களில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. மாநிலங்களுக்கும், மத்திய அரசுக்கும் இடையே ஒருங்கிணைப்பு மிக அவசியம். நாட்டில் மருத்துவ உட்கட்டமைப்பை அதிகரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பேணுதல், கைகளை அடிக்கடி சுத்தப்படுத்துதல் போன்ற தடுப்பு நடைமுறைகளைத் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். நாட்டில்,18 வயதுக்கு மேற்பட்டோரில், 96 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. 15 வயதுக்கு மேற்பட்ட தகுதியான மக்களில் 85 சதவீதம் பேருக்கு தடுப்பூசியின் 2வது டோஸ்களும் போடப்பட்டுள்ளது .வெப்ப அலை காரணமாக தீ விபத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளை மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!