மீண்டும் தீவிரமடையும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள்? புதிய பாதிப்புகள் எதிரொலி!

0
மீண்டும் தீவிரமடையும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள்? புதிய பாதிப்புகள் எதிரொலி!
மீண்டும் தீவிரமடையும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள்? புதிய பாதிப்புகள் எதிரொலி!
மீண்டும் தீவிரமடையும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள்? புதிய பாதிப்புகள் எதிரொலி!

சீனாவின் ஷாங்காய் நகரத்தில் கொரோனா பரவல் தொற்று விகிதம் குறைந்த ஆபத்து மண்டலங்களில், புதிதாக 58 பேருக்கு கொரோனா பாதிப்புகள் பதிவாகி இருப்பதால் ஊரடங்கு குறித்து மக்கள் மீண்டும் தங்களது அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.

புதிய பாதிப்புகள்

கடந்த ஒரு மாத காலமாக நகரம் முழுக்க முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கின்ற போதிலும் அதிகம் பரவக்கூடிய ஒமிக்ரான் மாறுபாட்டின் தினசரி புதிய பாதிப்புகள் இப்போது குறைந்த ஆபத்து மண்டலங்களில் பதிவாகி வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றின் பிறப்பிடமான சீனாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒமிக்ரான் மாறுபாடு வைரஸ் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. அந்த வகையில் கடந்த 2 ஆண்டுகளில் கட்டுப்பாட்டின் கீழ் வைக்கப்பட்டு இருந்த கொரோனா வைரஸ் பாதிப்புகள் இப்போது சீனாவில் அதிகளவு பதிவு செய்யப்பட்டு வருகிறது.

மே மாதத்தில் இன்னும் 10 நாட்களுக்கு வங்கி விடுமுறைகள் – முழு விவரம் இதோ!

இதனால் சீனாவின் ஷாங்காய், பெய்ஜிங் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஒரு மாத கால ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் ஷாங்காய் நகரத்தில் உள்ள குறைந்த ஆபத்து மண்டலங்களில் மீண்டும் புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ தரவுகளின்படி, புதிய வழக்குகள் தொடர்ச்சியாக ஒன்பதாவது நாளாக குறைந்து கடந்த 24 மணி நேரத்தில் 6.8% ஆக பதிவு செய்யப்பட்டு இந்த எண்ணிக்கை 7,333 ஆக இருந்தது. மேலும் அறிகுறி வழக்குகளின் எண்ணிக்கை 7.7% குறைந்து 727 ஆக உள்ளது.

Exams Daily Mobile App Download

இருப்பினும் கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு வெளியே 58 வழக்குகள் கண்டறியப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் ஷாங்காயில், கடுமையான கொரோனா வைரஸ் எதிர்ப்பு நடவடிக்கைகள், பொதுமக்களின் சீற்றத்தைத் தூண்டியுள்ளன. ஏனென்றால் நகரின் 25 மில்லியன் குடியிருப்பாளர்கள் ஒரு மாதத்திற்கும் மேலாக வீட்டிற்குள் பூட்டப்பட்டுள்ளனர். சிலர் குடியிருப்புப் பகுதிகளில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் பலர் அடிப்படை பொருட்களை பெற முடியாமல் சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். என்றாலும், இரண்டு நாட்களாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு வெளியே எந்த வழக்குகளும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று அறிவிக்கப்பட்ட நிலையில், மீண்டுமாக 58 புதிய நோய் தொற்றால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here