தேவையென்றால் முழு ஊரடங்கு அமல் – மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!

0
தேவையென்றால் முழு ஊரடங்கு அமல் - மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!
தேவையென்றால் முழு ஊரடங்கு அமல் - மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!
தேவையென்றால் முழு ஊரடங்கு அமல் – மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!

ஓமைக்ரான் வைரஸ் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பரவி வருகிறது. இதனால் பாதுகாப்பு நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக மேலும் சில வழிமுறைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஓமைக்ரான் பரவல்

தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமைக்ரான் வைரஸ் பல்வேறு நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்தியாவிலும் பல்வேறு மாநிலங்களில் வேகமாக ஓமைக்ரான் வைரஸ் பரவி வருகிறது. இதுவரை இந்தியாவில் ஓமைக்ரான் தொற்று 578 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு குறைந்த நாட்களில் வேகமாக இந்த ஓமைக்ரான் வைரஸ் பரவி வருவதால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்து வருகிறது. மேலும் அனைத்து மாநிலங்களும் தேவைப்பட்டால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி கொள்ளலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது.

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு இம்மாவட்டங்களில் மழை பெய்யும் – வானிலை அறிக்கை!

அத்துடன் இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூ‌ஷன் அவர்கள் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இதில் அவர் கூறியதாவது, இந்தியாவில் மத்திய அரசின் கொரோனா வழிகாட்டுதல் வழிமுறைகள் அனைத்து மாநிலங்களுக்கும் ஜனவரி 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும். ஓமைக்ரான் வைரஸ் பரவாமல் தடுக்க அனைத்து மாவட்டங்களில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்த வேண்டும். அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.

ரூ.15 கோடி செலவில் பிரதமர் மோடிக்கு பென்ஸ் கார் – பிரமிக்க வைக்கும் வசதிகள்! பாதுகாப்பு அம்சங்கள்!

மேலும் அனைத்து மாநில அரசுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போர்க்கால ஆயத்த அறைகளையும், அவசரகால நடவடிக்கை மையங்களையும் ஏற்படுத்த வேண்டும். அத்துடன் கொரோனா வழிகாட்டுதல் வழிமுறைகளான முகக்கவசம் அணிதல், தனிநபர் இடைவெளி போன்ற விதிமுறைகளை கட்டாயமாக பொதுமக்கள் பின்பற்ற வேண்டும். இந்நிலையில் ஓமைக்ரான் வேகமாக பரவுவதால் கொரோனா தடுப்பு விதிகளை மீறி செயல்படுவோர் மீது இந்திய குற்றவியல் சட்டம் 188 பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இக்கடிதத்தில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here