தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் முழு ஊரடங்கு நீட்டிப்பு – புதிய தளர்வுகள் அமல்!

0
தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் முழு ஊரடங்கு நீட்டிப்பு - புதிய தளர்வுகள் அமல்!
தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் முழு ஊரடங்கு நீட்டிப்பு - புதிய தளர்வுகள் அமல்!
தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் முழு ஊரடங்கு நீட்டிப்பு – புதிய தளர்வுகள் அமல்!

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக ஜூன் 28ம் தேதி வரை அமல்படுத்தப்பட்டு இருந்த முழு ஊரடங்கு மேலும் சில தளர்வுகளுடன் ஒரு வாரம் (ஜூலை 5 வரை) நீட்டிக்கப்படுவதாக கடந்த 25ம் தேதி முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்தார். இதில் வழங்கப்பட்ட தளர்வுகள் அனைத்தும் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

ஊரடங்கு தளர்வுகள் அமல்:

தமிழகம் முழுவதும் கொரோனா 2வது அலை கடந்த மே மாத மத்தியில் தீவிரமாக பரவி மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதனால் தினசரி 35 ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. எனவே மே 10ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கில் வழங்கப்பட்ட தளர்வுகள் திரும்ப பெறப்பட்டு, தீவிர கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. இதன் விளைவாக பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்வது முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறையத் தொடங்கியது.

தமிழக அரசு பள்ளிகளில் TC இல்லாமல் மாணவர் சேர்க்கை – அரசாணை வெளியீடு!

எனவே முழு ஊரடங்கில் இருந்து பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளன. தமிழக முதல்வர் கடந்த ஜூன் 25ம் தேதி வெளியிட்டு உள்ள அறிக்கையில் வழங்கப்பட்ட தளர்வுகள் அனைத்தும் நேற்று (ஜூன் 28) முதல் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி வகை 3 இல் உள்ள சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கோவில்கள், மசூதிகள், தேவாலயம் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள் கட்டுப்பாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் தரிசனத்திற்காக திறக்கப்பட்டு உள்ளன. தனியார் நிறுவனங்கள், மால்களும் செயல்பட தொடங்கி உள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

TN Job “FB  Group” Join Now

மேலும் வகை 2 இல் உள்ள 23 மாவட்டங்களில் பேருந்து சேவைகள் தொடங்கி உள்ளன. இருப்பினும் சில பகுதிகளில் அரசின் 50% பயணிகள் எனும் கட்டுப்பாடுகளை மீறி அதிகளவு மக்கள் பேருந்துகளில் பயணிப்பதை காண முடிகிறது. இதனால் அதிகளவு பேருந்துகளை இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி நகைக்கடைகள், துணி கடைகள் திறக்கப்பட்டு உள்ளன. வகை 1 இல் உள்ள 11 மாவட்டங்களில் சலூன், தேநீர் கடைகள் குறிப்பிட்ட நேரம் செயல்பட தொடங்கி உள்ளன. இதனால் மாநிலம் முழுவதும் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!