விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ முதல் ‘மௌன ராகம்’ வரை – சீரியல்களில் ரசிகர்களின் டாப் கமெண்ட்ஸ்!

0
விஜய் டிவி 'பாரதி கண்ணம்மா' முதல் 'மௌன ராகம்' வரை - சீரியல்களில் ரசிகர்களின் டாப் கமெண்ட்ஸ்!
விஜய் டிவி 'பாரதி கண்ணம்மா' முதல் 'மௌன ராகம்' வரை - சீரியல்களில் ரசிகர்களின் டாப் கமெண்ட்ஸ்!
விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ முதல் ‘மௌன ராகம்’ வரை – சீரியல்களில் ரசிகர்களின் டாப் கமெண்ட்ஸ்!

வரும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை ஹிட் சீரியல்களில் வர இருக்கும் காட்சிகள் குறித்த ப்ரோமோக்கள் வெளியாகியுள்ளது. இதற்கு ரசிகர்கள் அளித்துள்ள சூப்பர் கமெண்டுகள் குறித்து இந்த பதிவில் காண்போம்.

ரசிகர்களின் கமெண்டுகள்:

தினசரி சீரியல்கள் தொடரும் என்று போடும் போதும் ஒரு ஆர்வத்துடன் ரசிகர்களை வைத்திருப்பதற்காக ஒரு அதிர்ச்சியுடன் தான் முடிப்பார்கள். இதனால் ரசிகர்களுக்கு அடுத்த நாள் என்ன ஆகும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து தொடர்ந்து சீரியலை பார்க்க தொடங்குவார்கள். இந்நிலையில், ஒரு வாரம் முழுவதும் வர இருக்கும் காட்சிகள் குறித்த சில கிளிப்பிங்குகள் மட்டும் ப்ரோமோவாக வாரம் தொடங்குவதற்கு முன்னரே வெளியிடப்பட்டு வருகிறது. இதனால் தங்களின் பேவரிட் தொடர்களில் அடுத்து என்னவர் இருக்கும் என்பதை ரசிகர்கள் அறிந்து கொள்கின்றனர். சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் இந்த ப்ரோமோக்களுக்கு ரசிகர்கள் தங்களின் கமெண்டுகளையும் அளித்து வருகின்றனர். அதில், சூப்பர் கமெண்டுகளை பற்றி இந்த பதிவில் காண்போம்.

இந்தியாவில் தீவிரமெடுக்கும் ஓமைக்ரான் பரவல் – 5 பேருக்கு தொற்று உறுதி! பொதுமக்கள் அச்சம்!

பாரதி கண்ணம்மா:

பாரதியும் கண்ணம்மாவும் குழந்தைகளை பார்க்க வேண்டும் என்று சௌந்தர்யா வீட்டிற்கு வந்து இரவில் பார்த்து செல்வது போல் ப்ரோமோ வெளியிடபப்பட்டுள்ளது. இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் நினைச்ச உடனே நடுராத்திரில கிளம்பி வந்துடுவாங்க கண்ணம்மா பறந்து… இந்த வீடு 24 மணி நேரமும் தொறந்து போட்டே கிடக்கும் போல எப்டி இந்த நடு ராத்திரில ரெண்டும் நேரா உள்ள வந்துச்சுங்க என கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் யாருக்கும் தெரியாம ரெண்டு பேரும் எப்படி டா வீட்டுக்குள்ள போனீங்க என்று கேட்டுள்ளார். மேலும் ஒரு ரசிகர் எங்களை இன்னும் பைத்தியக்காரனவே நினைச்சுட்டு இருக்கீங்க… என்று கேட்டுள்ளார். யாருக்கு எப்படி இருக்கோ… தெரியாது… சௌந்தாயா…சந்தோஷமா இருக்காங்க…உலகில் தலை சிறந்த மாமியார்… என்று கூறியுள்ளார்.

ரோஜா:

மீண்டும் ரோஜா குற்றவாளியாக்கப்பட்டு உள்ளார்.அவரை காப்பாற்ற அர்ஜுன் போராட இருப்பதாக ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் எப்பப்பாத்தாலும் ரோஜா ஜெயிலுக்கு போறதுதான் கதையா என்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் அர்ஜுன் ரோஜா சந்தோசம் இந்த தயாரிப்பாளருக்கு பிடிக்கல போல. என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் என்னடா ஒரு வாரமா சீரியல் பிரச்சினை இல்லாம போகுதேன்னு பார்த்தேன் வந்துடுச்சு. கிளப்பிட்டாங்க என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் ஆமா, பார்க்க தான் போறோம் ஏனென்றால் பார்த்து பார்த்து பழக்கமாகிவிட்டது … என்று கூறியுள்ளார். இப்பதான் சீரியல் நல்ல போச்சி மறுபடியும் பழையபடி ஆரம்பிச்சிட்டாங்க என்று கூறியுள்ளார்.

மத்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை – 90 காலிப்பணியிடங்கள்..!

அன்பே வா:

அன்பே வா இந்த வார ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் பரவால டம்மி யா இருந்த வாசு இப்போ டான் ஆய்டாப்ள என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் வாசுகீ, வந்தனா இருவரின் திட்டம் உடைந்து. இரகசியம் வெளிவர வேண்டும் என்று கூறியுள்ளார். பூமிகா வருன் அன்பே வா நாடகத்துக்கு செம்ம ஜோடி என்று ஒருவர் கூறியுள்ளார். வாசுகி ஏற்க்கனவே சில்பா கூட சேர்ந்து கெட்டு போன இப்போ இந்த வந்தனா சேர்ந்து இருக்க இனி உன் நிலைமை என்ன ஆக போகுதோ என்று கேட்டுள்ளார்.

நம்ம வீட்டு பொண்ணு:

நம்ம வீட்டு பொண்ணு தொடரின் கதாநாயகன், நாயகிக்கு திருமணம் முடிந்து விட்டது போல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் என்னமா அங்க சத்தம் ஹீரோயின் சும்மா பேசிட்டு இருக்கோம் மாமா என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் சீரியல் பேரு நம்ம வீட்டு பொண்ணு… நம்ம ஹீரோக்கு அந்த பொண்ணு மேல ஒரு கண்ணு… அந்த பொண்ண இம்பிரஸ் பன்ன உருபடிய எதாவது பன்னு.. என கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் தெரியாமா கை பட்டத்துக்கு இப்படி யா…. அப்போ தெரிஞ்சு வச்சா… என்ன ஆகுறது என்று கேட்டுள்ளார். மேலும் ஒரு ரசிகர் பாவம் அந்த மாப்பிள்ளை தலைகாணினு பொண்னை கட்டி புடிச்சிட்டாரு அதுக்கு போய் அடுச்சிட்டாங்க என கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!