ஷிவ் நாடார் முதல் ராம் ஸ்ரீராம் வரை – தமிழகத்தின் டாப் பணக்காரர்களின் பட்டியல் வெளியீடு!

0
ஷிவ் நாடார் முதல் ராம் ஸ்ரீராம் வரை - தமிழகத்தின் டாப் பணக்காரர்களின் பட்டியல் வெளியீடு!
ஷிவ் நாடார் முதல் ராம் ஸ்ரீராம் வரை - தமிழகத்தின் டாப் பணக்காரர்களின் பட்டியல் வெளியீடு!
ஷிவ் நாடார் முதல் ராம் ஸ்ரீராம் வரை – தமிழகத்தின் டாப் பணக்காரர்களின் பட்டியல் வெளியீடு!

தமிழகத்தில் 2022ம் ஆண்டுக்கான தமிழக டாப் பணக்காரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் ஷிவ் நாடார், கலாநிதி மாறன், வெள்ளையன், என். சீனிவாசன், ராம் ஸ்ரீராம் உள்ளிட்டவர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா? இந்த பதிவில் இது தொடர்பான முழு விபரங்களை பார்ப்போம்.

பணக்காரர்கள் பட்டியல்

தமிழகத்தில் 2022ம் ஆண்டுக்கான தமிழக டாப் பணக்காரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்த பட்டியலில் உள்ள தமிழர்கள் இந்திய அளவில் உள்ள பணக்காரர்கள் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளனர் என்பது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. இதில் இடம்பிடித்துள்ள தொழிலதிபர்கள் குறித்தும், அவர்களின் சொத்து மதிப்பு குறித்தும் விரிவாக பார்ப்போம். இதில் முதலாவதாக நாம் பார்க்க உள்ளது இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான HCL தலைவரான சிவ சுப்பிரமணியம் என்ற ஷிவ் நாடார் ஆவார்.

Exams Daily Mobile App Download

இவர் இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராக விளங்குகிறார். இவரின் மொத்த சொத்து மதிப்பு 28.7 பில்லியன் டாலர்களாகும். தற்போது HCL நிறுவனத்தின் தலைவராக அவரது மகள் ரோஷினி நாடார் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக உள்ளவர் கவிதார்க் ராம் ஸ்ரீராம் இந்திய-அமெரிக்க பில்லியனர் மற்றும் தொழிலதிபர் ஆவார். இவர் கூகுளின் முதல் முதலீட்டாளர்களில் ஒருவராக கருதப்படுகிறார். இவர் அமெரிக்க சிட்டிசன் சிப்பை பெற்றுள்ளார். இவரின் சொத்து மதிப்பு 2.3 பில்லியன் டாலர்களாக உள்ளது.

இதனை தொடர்ந்து சன் நெட்வொர்க் தொலைக்காட்சி சேனல்கள், செய்தித்தாள்கள், வார இதழ்கள், எஃப்எம் வானொலி நிலையங்கள், டிடிஎச் சேவைகள், கிரிக்கெட் அணி மற்றும் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் என பல்வகை தொழிலில் ஈடுபடுபவர் கலாநிதி மாறன் ஆவார். இவரின் சொத்து மதிப்பு 270 கோடி டாலர்களாக உள்ளது. இதையடுத்து முருகப்பா குழுமத்தை தலைமை தாங்கி வரும் வெள்ளையனின் சொத்து மதிப்பு 1 பில்லியன் டாலர்களாக கணக்கிடப்பட்டுள்ளது. அடுத்ததாக இந்தியா சிமெண்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் நாராயணசாமி சீனிவாசன் அவர்களும் தமிழகத்தின் பணக்கார பட்டியலில் இடம்பெற்றுள்ளார். இவரின் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 100 மில்லியன் டாலர்களாகும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here