செப்.29 முதல் தமிழகத்தில் தொடங்கும் புதிய கணக்கெடுப்பு – அரசின் மாஸ் பிளான்!
தமிழகத்தில் செப்டம்பர் 29ஆம் தேதி முதல் புதிய கணக்கெடுப்பு தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன் மூலம் அரசுக்கு தேவையான பல்வேறு தகவல்களும் திரட்டப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் திட்டம்:
தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் நடத்தப்படும். இறுதியாக 2011ம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பிற்கு பிறகு 2021ம் ஆண்டு கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழக அரசு மாநிலத்தில் செயல்படுத்தும் திட்டங்களுக்கான தகவல்களை துல்லிய தன்மையுடன் சேகரிப்பதற்கான வழிமுறைகளை கையாண்டு வருகிறது.
Follow our Instagram for more Latest Updates
அதன்படி பல்வேறு தரப்பிலான மக்களுக்குமான திட்டங்களை அமல்படுத்துவதற்கு துல்லியமான புள்ளி விபரங்கள் தேவைப்படுகிறது. இதற்காக செப்டம்பர் 29ஆம் தேதி முதல் தமிழகத்தில் முதல் கட்டமாக சென்னை, திருச்சி, தர்மபுரி, கடலூர், தென்காசி ஆகிய ஐந்து மாவட்டங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான கணக்கெடுப்புகள் நடத்தப்பட உள்ளது. இதன் பிறகு இரண்டாம் கட்ட பணிகள் நடத்தப்படும். இந்தத் திட்டத்திற்கு உலக வங்கி தமிழக அரசுக்கு நிதி உதவி அளித்து வருகிறது.
வரலாற்றில் செப் 24 2007… இந்தியா செய்த சாதனை.. உலகமே அதிர்ந்த சம்பவம்!
அடுத்து வரும் நாட்களில் தொடங்க உள்ள கணக்கெடுப்பில் கேட்கப்படும் கேள்விகள் குறித்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குனர் கமல் கிஷோர் அவர்கள், சர்வேயில் ஒவ்வொரு மாற்றுத்திறனாளிகளின் பெயர், வயது, கல்வித் தகுதி, குடும்ப உறுப்பினர்களின் பெயர், பணி போன்ற விவரங்கள் சேகரிக்கப்படும். இந்த சர்வே பணிகளில் தமிழக பெண்கள் மேம்பாட்டு கழகத்தை சேர்ந்த 600 பெண் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.