ஜூன் 10 முதல் 21 நாட்களுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு – கல்வித்துறை உத்தரவு!

0
ஜூன் 10 முதல் 21 நாட்களுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு - கல்வித்துறை உத்தரவு!
ஜூன் 10 முதல் 21 நாட்களுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு - கல்வித்துறை உத்தரவு!
ஜூன் 10 முதல் 21 நாட்களுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு – கல்வித்துறை உத்தரவு!

ஜம்மு காஷ்மீரில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருவதால் ஜூன் 10 முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை உள்ள 21 நாட்களுக்கு கோடை விடுமுறை என கல்வித்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

கோடை விடுமுறை:

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவலின் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகத் தான் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. மேலும், இந்த இரண்டு ஆண்டுகளும் பள்ளி மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் ஆன்லைன் மூலமாக செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட்டன. ஓரளவுக்கு கொரோனா பரவல் குறைந்ததுமே பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. மேலும், பள்ளி மாணவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் கழித்து ஆண்டு பொதுத் தேர்வு நடத்தப்பட்டது.

1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – ஜூன் 15 பள்ளிகள் திறப்பு, மாநில அரசு அதிரடி முடிவு!

எப்போதும் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு மார்ச், ஏப்ரல் மாதத்திலேயே அனைத்து தேர்வுகளும் நடத்தி முடித்துவிட்டு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கும். ஆனால், இந்த ஆண்டு காலம் தாழ்த்தி தான் பள்ளி கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளதால் தற்போது வரைக்கும் கூட கல்லூரி மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. பள்ளி மாணவர்களுக்கு மே மாதத்தில் பொதுத் தேர்வு நடத்தப்பட்டு தற்போது கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

கல்லூரி மாணவர்களுக்கு இந்த மாதத்தில் தான் செமஸ்டர் தேர்வுகள் நடைபெற இருக்கிறது. மேலும் வழக்கத்திற்கு மாறாக இந்த ஆண்டில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மாணவர்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். ஜம்மு காஷ்மீரில் 46 டிகிரி வரைக்கும் வெப்பம் பதிவாகி வருகிறது. இதனால் ஜம்மு கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் ஜூன் 10 ஆம் தேதியில் இருந்து ஜூன் 30 ஆம் தேதி வரைக்கும் கோடைவிடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!