வங்கி சேவைகள் முதல் பெட்ரோல் விலை வரை – செப்.1 ம் தேதி முதல் அமலுக்கு வரும் மாற்றங்கள்!

0
வங்கி சேவைகள் முதல் பெட்ரோல் விலை வரை - செப்.1 ம் தேதி முதல் அமலுக்கு வரும் மாற்றங்கள்!
வங்கி சேவைகள் முதல் பெட்ரோல் விலை வரை - செப்.1 ம் தேதி முதல் அமலுக்கு வரும் மாற்றங்கள்!
வங்கி சேவைகள் முதல் பெட்ரோல் விலை வரை – செப்.1 ம் தேதி முதல் அமலுக்கு வரும் மாற்றங்கள்!

செப்டம்பர் மாதத்தில் மத்திய அரசு பல முக்கிய மாற்றங்களை அமலுக்கு கொண்டு வர இருக்கிறது. வங்கி சேவைகள் முதல் பெட்ரோல் மற்றும் சிலிண்டர் விலை வரை பல மாற்றங்கள் வர இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாதம் சிறிது நாட்களில் துவங்க இருப்பதால் பொது மக்கள் அதனை கருத்தில் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

செப்டம்பர் புதிய விதிகள் 2022:

ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் அரசு புதிய விதிகளை அமலுக்கு கொண்டு வருவது வழக்கம் ஆகும். அந்த வகையில் தற்போது வர இருக்கும் செப்டம்பர் மாதத்தில் சிலிண்டர் விலை முதல் வங்கி சேவைகள் வரை பலவற்றிலும் மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளது. இதனால் மக்கள் சிறிது அச்சத்தில் தான் உள்ளனர். கடுமையான விலைவாசி உயர்வை மக்கள் ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில், இந்த புதிய விதிகள் மூலம் பொருளாதார நிலையில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாகவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

முதல் மாத எல்பிஜி சிலிண்டரின் விலையை பெட்ரோலிய நிறுவனம் நிர்ணயிக்கிறது. அல்லது செப்டம்பர் 1 ஆம் தேதிக்குள், அரசு பெட்ரோலிய நிறுவனம் எல்பிஜி கேஸ் சிலிண்டர்களின் விலையை குறைக்கலாம். இதே போல், பஞ்சாப் நேஷனல் பேங்க் ஆகஸ்ட் 31 ம் தேதியோடு KYC இல்லாத கணக்குகள் மூடப்படும் என்று தெரிவித்திருக்கிறது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் ஒவ்வொரு வாடிக்கையாளரும் KYC ஐ புதுப்பிக்க வேண்டும். 31 மார்ச் 2022 வரை, நீங்கள் KYCஐப் புதுப்பிக்க வேண்டும் என்று முன்னதாக அறிவித்திருந்தது.

ரயில் பயணிகளுக்கான முக்கிய தகவல் – IRCTC புதிய அறிவிப்பு!

ஆனால், ஆகஸ்ட் 31 வரை KYCக்கான கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. இதன் பிறகும், முறையாக KYC ஐ முடிக்காவிட்டால், எந்த காரணமும் இல்லாமல் கணக்கு மூடப்படும் என்று தெரிவித்திருக்கிறது. பெட்ரோலிய நிறுவனம் பெட்ரோல், டீசல் விலையில் ஏற்ற இறக்கத்தை அறிவிக்கும் என்பது உறுதியாகியுள்ளது. பணவீக்கத்தின் காரணமாக எழும் சூழ்நிலைகளுக்கு மக்கள் தயாராக வேண்டிய நிலையில் உள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!