நடிகை சமந்தாவை திருமணம் செய்ய சொல்லும் நண்பர்கள் – வைரலாகும் ரீல்ஸ் வீடியோ!

0
நடிகை சமந்தாவை திருமணம் செய்ய சொல்லும் நண்பர்கள் - வைரலாகும் ரீல்ஸ் வீடியோ!
நடிகை சமந்தாவை திருமணம் செய்ய சொல்லும் நண்பர்கள் - வைரலாகும் ரீல்ஸ் வீடியோ!
நடிகை சமந்தாவை திருமணம் செய்ய சொல்லும் நண்பர்கள் – வைரலாகும் ரீல்ஸ் வீடியோ!

தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக இருக்கும் சமந்தா, சில மாதங்களுக்கு முன் தன்னுடைய காதல் கணவரை விவாகரத்து செய்த நிலையில் தற்போது முழு மூச்சாக நடிப்பில் ஆர்வம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் சமந்தாவை திருமணம் செய்ய சொல்லி அவரது நண்பர்கள் செய்த க்யூட் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை சமந்தா:

சினிமாவில் பல வெற்றி படங்களில் நடித்து சிறந்த நடிகைகளில் ஒருவராக இருக்கும் சமந்தா, நடுத்தரக் குடும்பத்தில் இருந்து நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் தற்போது டாப் கதாநாயகிகளில் ஒருவராக இருக்கிறார். சமந்தா கடந்த 2017 ஆம் ஆண்டு தன்னுடன் நடித்த சக நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சந்தோசமாக சென்று கொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கையை திடீரென முடித்துக் கொள்ள இருப்பதாக சில மாதங்களுக்கு முன் அவர் அறிவித்தார்.

Exams Daily Mobile App Download

அவர்களுக்கு தற்போது விவாகரத்து ஆகி இருக்கிறது. விவாகரத்திற்கு பின் மன உளைச்சலில் இருந்த சமந்தா தற்போது பல புது விதமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். அது மட்டுமில்லாமல் தனது நண்பர்களுடன் அதிக நேரம் செலவிட்டு ஆன்மீக சுற்றுலாக்கள் சென்று வந்து விவாகாரத்தில் இருந்து வெளியே வர முயற்சிகளை செய்தார். அதன் பின் நடிப்பில் முழு மூச்சாய் இறங்கிவிட்டார். சமீபத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காதுவாக்குல இரண்டு காதல் படம் வெளியானது.

கதிருக்கு ஆதரவாக சண்டை போட்ட பார்வதி, குடும்பத்தில் வந்த பெரிய பிரச்சனை – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

இந்நிலையில் தற்போது தனியாக இருக்கும் சமந்தா மீண்டும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என அவரது நண்பர்கள் இன்ஸ்டாவில் தற்போது ட்ரெண்டாகி வரும் பாடல் ஒன்றிற்கு ரீல்ஸ் செய்து இருக்கின்றனர். அந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகம் லைக் செய்யப்பட்டு வருகிறது. மேலும் சமந்தா இரண்டாவது திருமணம் செய்ய திட்டமிடுகிறாரா என்ற சந்தேகம் வந்துள்ளது. அவருடைய கணவர் இரண்டாவது திருமணம் செய்ய இருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!