முகநூல், வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம் முடக்கம்? – நிறுவனத்தின் விளக்கம்!

0
முகநூல், வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம் முடக்கம்? - நிறுவனத்தின் விளக்கம்!
முகநூல், வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம் முடக்கம்? - நிறுவனத்தின் விளக்கம்!
முகநூல், வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம் முடக்கம்? – நிறுவனத்தின் விளக்கம்!

வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம் மற்றும் முகநூல் போன்ற சமூக வலைத்தளங்கள் கடந்த திங்கள் கிழமை இரவு முற்றிலுமாக உலகம் முழுவதும் முடங்கியது. இதற்கான விளக்கத்தை முகநூல் அமைப்புக் கட்டுமானத்தின் துணைத் தலைவர் அளித்துள்ளார்.

சமூக ஊடகங்கள் முடக்கம்:

கடந்த அக்டோபர் 4ம் தேதி திங்கள் கிழமை அன்று திடீரென்று உலகம் முழுவதும் வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம் மற்றும் முகநூல் போன்ற சமூக வலைத்தளங்கள் முடங்கியது. இதனை முதலில் அறியாத மக்கள் பலரும் இணையத்தில் தான் எதோ கோளாறு என்று அதனை சரி பார்க்க தொடங்கினர். பின்னர், ஒருவருக்கொருவர் தொடர்பு கொண்டு இதனை பற்றி தெரிந்த பின்னர் தான் உலகம் முழுவதும் இந்த செயலிகள் செயல்பட வில்லை என்று தெரியவந்தது.

தமிழக அஞ்சலகங்களில் இனி படிவங்கள் தமிழில் இருக்கும் – எம்.பி. சு.வெங்கடேசன் பெருமிதம்!

இதனால் டிவீட்டர் தலத்தில் சமூக ஊடக செயலிகள் தொடர்பான ஹாஸ்டேக் ட்ரெண்டானது. இறுதியாக 9 மணி நேரதிற்கு பிறகு இந்த பிரச்சனை சரி செய்யப்பட்டு மீண்டும் செயலிகள் செயல்பட தொடங்கியது. இதனால் உலகம் முழுவதும் உள்ள மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். இதற்காக பேஸ்புக் நிறுவனம் தடங்களுக்கு மன்னிப்பு கோரியது. இந்நிலையில், முகநூல் அமைப்புக் கட்டுமானத்தின் துணைத் தலைவரான சந்தோஷ் ஜனார்த்தனன் இது குறித்து விளக்கமளித்துள்ளார். அதில், சமூக ஊடகங்கள் வைரஸ் பாதிப்பினால் முடக்கப்படவில்லை.

சென்னையில் நாளை ( அக்.7) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

மேலும், வழக்கமான பராமரிப்புப் பணிகளில் ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கல்களாலேயே சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த முடியாமல் போனது. பராமரிப்பு பணியின் போது உலகளாவிய சேமிப்புத்திறனை மதிப்பிடும் நோக்கத்துடன் பிறப்பிக்கப்பட்ட மென்பொருள் கட்டளையில் ஏற்பட்ட பிழை காரணமாக உலகளவில் உள்ள அனைத்து இணைப்புகளும் தற்செயலாக துண்டிக்கப்பட்டுவிட்டது. மேலும், சிக்கலை சரிபடுத்துவதற்காக மென்பொறியாளர்கள் ஈடுபட்டிருந்தனர், இதனால் கூடுதல் பாதுகாப்பு அடுக்குகள் காரணமாக உடனடியாக சரிசெய்ய முடியவில்லை என்று கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!