தமிழக ஊழியர்களுக்கு இலவச இருசக்கர வாகனங்களுக்கான மானியம் ஒதுக்கீடு – அரசாணை வெளியீடு!

0
தமிழக ஊழியர்களுக்கு இலவச இருசக்கர வாகனங்களுக்கான மானியம் ஒதுக்கீடு - அரசாணை வெளியீடு!
தமிழக ஊழியர்களுக்கு இலவச இருசக்கர வாகனங்களுக்கான மானியம் ஒதுக்கீடு - அரசாணை வெளியீடு!
தமிழக ஊழியர்களுக்கு இலவச இருசக்கர வாகனங்களுக்கான மானியம் ஒதுக்கீடு – அரசாணை வெளியீடு!

தமிழக அரசின் உலமாக்கள் மற்றும் பணியாளர் நலவாரியத்தில் உறுப்பினர்களாக இருக்கும் சுமார் 10,583 பேருக்கு மிதிவண்டி வழங்குவதற்கு முடிவு செய்துள்ள அரசு அதற்கான நிதி ஒதுக்கி தற்போது அரசாணை வெளியிட்டுள்ளது.

மிதிவண்டி வழங்கல்

தமிழ்நாடு வக்பு வாரியத்தில்‌ பதிவு செய்யப்பட்டு வக்பு நிறுவனங்களில்‌ பணியாற்றும்‌ உலமாக்களுக்கு சில சலுகைகளை வழங்க சட்டமன்ற பேரவையின் போது அரசு முடிவு செய்திருந்தது. அந்த வகையில் தங்களது பணியை சிறப்பாகவும், செம்மையாகவும் செய்வதற்காக சுமார் 10,583 பேருக்கு இருசக்கர வாகனங்களை வழங்க அரசு குறிப்பிட்ட அளவுத்தொகையை மானியமாக வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஒருவர் இருசக்கர வாகனம் வாங்குவதற்கு அந்த வாகனத்தின்‌ கொள்ளளவு 125CC என்ற அளவுக்கு மிகாமலும்‌ வாகன விதிமுறை சட்டம்‌ 1998ன் படியும் பதிவு செய்திருக்க வேண்டும்‌.

தமிழகத்தில் காவலர் வசிக்கும் வீடுகள் பெரியாதக்கப்படும் – தமிழக அரசு அறிவிப்பு!!

இந்த நடைமுறைகளை செய்யும் வக்பு நிறுவன உலமாக்களுக்கு இருசக்கர வாகனத்திற்கான மொத்த விலையில்‌ 50% அல்லது வாகனத்தின்‌ விலையில்‌ ரூ.25,000 வரை மானியமாக வழங்கப்படும்‌. அதே நேரத்தில் தற்போது உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்களாக இருக்கும் 10,583 பேருக்கு இலவச இருசக்கர வாகனங்களை வழங்குவதற்கு சுமார் ரூ.4,76,73,000 நிதியை ஒதுக்கீடு செய்துள்ள அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

டிசம்பர் 15 வரை பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு – கொரோனா பரவல் எதிரொலி!

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், தமிழகத்தில் கடந்த சட்டமன்ற பேரவையின் போது 2021 – 22ம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்களாக இருக்கும் 10,583 பேருக்கு சுமார் ரூ.4,76,73,000 செலவில் இருசக்கர வாகனங்கள் வழங்கப்படும் என சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். இந்த அறிவிப்பின் படி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிவாசல்கள், தர்காக்கள் மற்றும் மதரஸாக்களில் பணிபுரியும் உலமாக்களுக்கு இருசக்கர வாகனங்களுக்கான நிதி வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!