அரசு பள்ளி மாணவர்களுக்கு இனி இலவச வேன் வசதி – அரசு முடிவு!

0
அரசு பள்ளி மாணவர்களுக்கு இனி இலவச வேன் வசதி - அரசு முடிவு!
அரசு பள்ளி மாணவர்களுக்கு இனி இலவச வேன் வசதி - அரசு முடிவு!
அரசு பள்ளி மாணவர்களுக்கு இனி இலவச வேன் வசதி – அரசு முடிவு!

அரசு பள்ளி மாணவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக அரசு பள்ளி மாணவர்களுக்கு என்று புதிய திட்டம் ஒன்று செயல்பட இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது.

இலவச வேன் வசதி:

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் அரசு பள்ளி மாணவர்களுக்கு என்று பல்வேறு நல திட்டங்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் இலவச கல்வி, சீருடை, புத்தகங்கள் போன்றவை வழங்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. தற்போது தமிழகத்தை தொடர்ந்து கர்நாடகாவில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச வேன் வசதி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 48 ஆயிரத்து 285 அரசு பள்ளிகளும் 6,312 அரசு உதவி பெறும் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளில் 65 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர்.

Exams Daily Mobile App Download

மேலும் மலைநாடு, மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம், வனப்பகுதி, கல்யாண கர்நாடக மற்றும் சில வட கர்நாடக மாவட்டங்களில் கிராமப்புறங்களில் வசிக்கும் மாணவர்கள் தினமும் பள்ளிக்கு வர போக்குவரத்து வசதி இல்லாததால் நகரங்களுக்கு வந்து கல்வி கற்பதில் சில சிரமங்களை எதிர்கொள்கின்றனர். மேலும் இப்பகுதிகளில் இருந்து கல்வி பயில்வோர் விகிதமும் குறைந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதனால் இப்பகுதிகளில் பகுதிகளில் மாணவர்கள் பள்ளிக்கு வர ஏதாவது ஒரு வாகனத்தின் உதவியை தான் நாட வேண்டி உள்ளது. இதன் காரணமாக பெரும்பாலான கிராமப்புற பகுதிகளில் மாணவர்கள் பாதியிலேயே படிப்பை விட்டு விடுகின்றனர்.

LPG சமையல் சிலிண்டர் மானியம் பெற இனி ‘இது’ கட்டாயம் – மத்திய அரசு தகவல்!

கடந்த 2007-ம் ஆண்டு முதல் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள்களும் வழங்கப்படவில்லை. இத்தகைய பிரச்சனையை சரி செய்ய 54,000 அரசு பள்ளிகளுக்கு வேன் வழங்க அரசு முடிவு செய்து உள்ளது. இந்த வேன் ஓட்டுநர் சம்பளம், எரிபொருள், வேனின் பராமரிப்பு செலவு, டீசல் உள்ளிட்டவைகளை பள்ளி வளர்ச்சி குழுவினர் பார்த்து கொள்ள வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் வேன் வாங்க நன்கொடையாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினரிடமும் உதவி கேட்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!