நாடு முழுவதும் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை – ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டம்!

0
நாடு முழுவதும் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை - ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டம்!
நாடு முழுவதும் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை - ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டம்!
நாடு முழுவதும் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை – ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டம்!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பொதுமக்களுக்கு அதிகமாக மருத்துவ செலவு ஏற்படுவதால் மத்திய அரசால் ஆயுஷ்மான் பாரத் யோஜனா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது அரசு. இந்த திட்டம் குறித்த முழு விவரங்களை இந்த பதிவில் காணலாம்.

பாரத் யோஜனா திட்டம்:

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் தங்களது உறவினர்களை இழந்து தவிக்கின்றனர். மேலும் கொரோனாவிற்கு பல அரசு மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. அதனால் மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லாமல் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் தனியார் மருத்துவமனைகளில் பல லட்சம் செலவில் சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது.

FD கணக்கில் 7% வட்டி வழங்கும் சிறிய வங்கிகள் – முழு விவரம் இதோ!

கொரோனா காரணமாக பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட மக்கள் மருத்துவ செலவிற்கும் பணம் இல்லாமல் தவிக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே மக்கள் நலனுக்காக மத்திய அரசால் ஆயுஷ்மான் பாரத் யோஜனா என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டமானது சுகாதார திட்டமாகும். இதில் அடையாள அட்டை ஒன்று வழங்கப்படுகிறது அதன் மூலமாக அனைத்து மருத்துவமனைகளும் இலவச சிகிச்சை பெறலாம். நீங்கள் எந்த சுகாதார திட்டத்திலும் இல்லை என்றால் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் நீங்கள் சிகிச்சை பெறலாம்.

இந்த ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் ‘ஆயுஷ் மான் பாரத் கோல்டன் கார்டு’ வழங்கப்படுகிறது. இதை வைத்து ஏழை மக்கள் 5 லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சை பெற முடியும். இந்த திட்டம் கிராமப்புற மக்களுக்கு மட்டும் இல்லாமல் நகர்ப்புற மக்களுக்கும் பயனுள்ளதாக உள்ளது. இந்த திட்டம் மூலமாக நீங்கள் பயன் பெற ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். ஆனால் இதனை நீங்கள் விண்ணப்பிக்க முடியாது. அதற்கு பதிலாக அருகில் உள்ள பொது சேவை மையம் அல்லது மாவட்ட அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, புகைப்படம், வாக்காளர் அட்டை போன்ற ஆவணங்கள் தேவை, இந்த கார்டு மூலமாக அறுவை சிகிச்சை, மருத்துவ பராமரிப்பு சிகிச்சை, நோயறிதல் போன்ற 1,350 வகையான சிகிச்சைகளை பெற முடியும். மேலும் 19 வகையான ஆயுர்வேத, ஹோமியோபதி, யோகா, யுனானி வைத்தியங்களும் கூட இலவசமாக செய்யலாம். இந்த கார்டு மூலமாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று 5 லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சை பெறலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here