தமிழக நகர பேருந்துகளில் இன்று முதல் இலவச பயணம் – முதல்வர் உத்தரவு!

0
தமிழக நகர பேருந்துகளில் இன்று முதல் இலவச பயணம் - முதல்வர் உத்தரவு!
தமிழக நகர பேருந்துகளில் இன்று முதல் இலவச பயணம் - முதல்வர் உத்தரவு!
தமிழக நகர பேருந்துகளில் இன்று முதல் இலவச பயணம் – முதல்வர் உத்தரவு!

தமிழகத்தில் நகர பேருந்துகளில் பெண்கள் பயணம் செய்ய இலவசம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் பயணம் செய்ய இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

இலவச பயணம்:

தமிழகத்தின் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் பதவியேற்ற பின்பு மக்கள் பயனடையும் வகையில் பல வகையான அறிவிப்புகளை அறிவித்து வருகிறார். அதன்படி தான் பதவியேற்ற முதல் நாளில் தமிழகத்தில் நகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று அறிவித்தார் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள். இந்த அறிவிப்பு மாநில பெண்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வந்தது. இதை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் தங்களுக்கும் கட்டணமில்லா பயணம் என்று அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

தமிழக முதல்வரின் காப்பீடு திட்ட பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

இதை அடுத்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இது குறித்து ஆலோசனை மேற்கொண்டு தமிழக நகர பேருந்துகளில் மூன்றாம் பாலினத்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் உதவியாளர் ஆகியோர் கட்டனமில்லா பயணம் மேற்கொள்ளலாம் என்று அறிவித்தார். இந்த அறிவிப்பு பல்வேறு தரப்பு பாராட்டுகளை பெற்றது. இந்நிலையில் தமிழகத்தில் சுமார் ஒரு மாத காலத்திற்கு பின்பு பேருந்து சேவை இன்று முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

இதை அடுத்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு கட்டணமில்லா பயண திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதற்காக 4 வண்ணங்களில் கட்டணமில்லா பயணச்சீட்டு தனியாக அச்சிடப்பட்டு அவர்களுக்கு வழங்கப்படுகிறது. எனவே மேலே குறிப்பிட்டவர்கள் அனைவரும் கட்டணமில்லா பயணச்சீட்டு பெற்றுக்கொண்டு நகர பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!