தமிழக தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை – ஏப்ரல் 20 முதல் விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
தமிழக தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை - ஏப்ரல் 20 முதல் விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழக தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை - ஏப்ரல் 20 முதல் விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழக தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை – ஏப்ரல் 20 முதல் விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழகத்தில் கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் (RTE) கீழ் தனியார் பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கு ஏப்ரல் 20ம் தேதி ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

RTE:

தமிழகத்தில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் தனியார் பள்ளிகளில் படிக்க அரசு குறிப்பிட்ட அளவு இட ஒதுக்கீட்டை வழங்கியுள்ளது. அதன் படி தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். இதற்கான முழு கல்விச் செலவையும் அரசே ஏற்கிறது. ஆண்டுதோறும் தகுதியுடைய மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தனியார் பள்ளிகளில் கல்வி பெறும் உரிமை பெறுகின்றனர். 1 முதல் 8ம் வகுப்பு வரை ஏழை எளிய மாணவர்கள் தனியார் பள்ளிகளில் கல்வி கற்கலாம்.

TN Job “FB  Group” Join Now

மேலும் தனியார் பள்ளிகளில் எல் கே ஜி அல்லது முதல் வகுப்புகளில் 25% ஒதுக்கீட்டில் மாணவர்கள் கல்வி கற்க அனுமதிக்கப்படுவர். 2022-2023 ம் கல்வியாண்டிற்கான கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை 20ஆம் தேதி ஆன்லைன் மூலம் தொடங்க உள்ளது. விண்ணப்பிக்க விரும்பும் குழந்தைகளின் பெற்றோர் www.rte.tnschools.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் கல்வி பெற விரும்பும் மாணவர்களின் பெற்றோர்கள் ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கு கீழ் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது.

கோபியை வீட்டை விட்டு துரத்திவிட்ட குடும்பத்தினர் – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் அதிர்ச்சி!

இதில் சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை மெட்ரிக் பள்ளிகள் நர்சரி, பிரைமரி பள்ளிகள் என மொத்தம் 355 பள்ளிகளில் இந்த 25 சதவிகிதத்தின் கீழ் மாணவர் சேர்க்கை வழங்கப்படுகிறது. இதே போல நாமக்கல் மாவட்டத்தில் 158 பள்ளிகளும் தர்மபுரி மாவட்டத்தில் 163 பள்ளிகளும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 226 என நான்கு மாவட்டங்களிலும் மொத்தம் 902 தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!