திருப்பதியில் இன்று முதல் கட்டணமில்லா சிறப்பு தரிசனம் – ஆன்மிக சுற்றுலா திட்டம்!

0
திருப்பதியில் இன்று முதல் கட்டணமில்லா சிறப்பு தரிசனம் - ஆன்மிக சுற்றுலா திட்டம்!
திருப்பதியில் இன்று முதல் கட்டணமில்லா சிறப்பு தரிசனம் - ஆன்மிக சுற்றுலா திட்டம்!
திருப்பதியில் இன்று முதல் கட்டணமில்லா சிறப்பு தரிசனம் – ஆன்மிக சுற்றுலா திட்டம்!

தமிழ்நாட்டில் இருந்து திருப்பதிக்கு ஆன்மிக சுற்றுலா திட்டம் இன்று முதல் 4 நகரங்களில் துவங்கப்பட்டுள்ளது. மேலும், இதில் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு ஏசி பஸ், காலை மற்றும் மதிய உணவும், ஏழுமலையானை தரிசிக்க சிறப்பு தரிசன சீட்டும் எவ்வித கட்டணமும் இன்றி கொடுக்கப்படும்.

திருப்பதி சுற்றுலா திட்டம்:

இந்தியாவில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஆந்திர மாநிலம் திருப்பதி கோவில் முதன்மையான ஒன்றாக விளங்கி வருகிறது. திருப்பதி என்றாலே பலரது நினைவுக்கு வருவது ஏழுமலையானும் அந்த கோவிலில் கொடுக்கப்படும் பிரசாதமும் தான். அப்படி என்ன ஸ்பெஷல்ன்னு யாராலயும் கேக்க முடியாது, அந்த அளவுக்கு புகழடைந்த ஒன்று. குறிப்பாக பணக்கார கடவுளான திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் இடைவிடாமல் தொடர்ந்து வந்த மயமாக இருப்பார்கள்.

தமிழகத்தில் சிறந்த நெசவாளர் விருதுகள் 2022 – முதல்வர் அறிவிப்பு!

அதிலும் தமிழ்நாட்டில் இருந்து மக்கள் திருப்பதிக்கு செல்வதை பெரும் விசேஷமாக நினைத்து குடும்பமாக செல்வார்கள். இவர்களுக்காகவே முன்னதாக தமிழக அரசு சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் ஆன்மிக சுற்றுலா திட்டத்தை செயல்படுத்தியது. அது தற்போது நடைமுறையிலும் இருந்து வருகிறது. மேலும், திருப்பதி ஏழுமலையான் பக்தர்களுக்காக செயல்படுத்தப்பட்ட சுற்றுலா திட்டம் தற்போது திருச்சி, மதுரை, சேலம் மற்றும் கோவை ஆகிய இடங்களில் இருந்து செல்லும் வகையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் விரிவுபடுத்தியுள்ளது.

Exams Daily Mobile App Download

இந்த திட்டம் மூலம் ஏழுமலையான் பக்தர்கள் குறிப்பிட்ட நாள் மட்டுமின்றி தினசரி திருப்பதி சென்று வரவும் முடியும். இந்த சுற்றுலா திட்டம் இன்று (ஆகஸ்ட் 8) முதல் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. மேலும், இதை குறித்து முழு விவரமும் கீழ் வருவன.

  • திருப்பதி சுற்றுலா திட்டத்தில் பயன்பெற 7 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்ய வேண்டும்.
  • பக்தர்கள் ஏசி பஸ்சில் அழைத்து செல்லப்படுவார்கள்.
  • திருச்சி மற்றும் சேலத்தில் இருந்து திருப்பதிக்கு செல்லும் பெரியவர்களுக்கு ரூ.3,330 மற்றும் 10 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு ரூ.3000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • மதுரை மற்றும் கோயம்புத்தூரில் இருந்து திருப்பதிக்கு செல்லும் பெரியவர்களுக்கு ரூ.4,000 மற்றும் 10 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு ரூ.3,700 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு இருவேளையும் சைவ உணவு வழங்கப்படும்.
  • சிறப்பு தரிசன பயணச்சீட்டு பக்தர்களுக்கு வழங்கப்படும். ( தனி கட்டணம் இல்லை)

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!