ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – இலவச ரேஷன் திட்டம் மே 31 வரை நீட்டிப்பு!

0
ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் - இலவச ரேஷன் திட்டம் மே 31 வரை நீட்டிப்பு!
ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் - இலவச ரேஷன் திட்டம் மே 31 வரை நீட்டிப்பு!
ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – இலவச ரேஷன் திட்டம் மே 31 வரை நீட்டிப்பு!

தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் மற்றும் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா ஆகிய திட்டங்களின் கீழ் வழங்கப்படும் இலவச ரேஷன் திட்டம் டிசம்பர் 31ம் தேதியுடன் முடிவடைவதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கால அவகாசம் நீட்டிப்பு:

கோவிட்-19 பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பினை குறைப்பதற்கும், மக்களுக்கு உதவுவதற்கும் பிரதமரால் துவக்கப்பட்ட உணவு பாதுகாப்பு நலத்திட்டம் தான் கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம். இதன் மூலம் நாட்டில் உள்ள அனைத்து தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தினால் பலனடையும் பயனர்களும் நபருக்கு ஐந்து கிலோ வீதம் கூடுதல் உணவு தானியம் ரேஷன் அட்டைகளுக்கு வழங்கப்பட்டது. வட இந்திய மாநிலங்களில் இதற்கு பதிலாக ஐந்து கிலோ கோதுமை ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கப்பட்ட இந்த திட்டம் குறித்து முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

தமிழகத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு சூப்பர் வேலைவாய்ப்பு – டிச.27 கடைசி நாள்!

தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் (NFSA), 2013 மற்றும் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா (PMGKAY) ஆகியவற்றின் கீழ் டெல்லியில் இலவச ரேஷன் விநியோகிக்கப்படுகிறது. டெல்லியில் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திற்குப் பிறகு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக நவம்பர் 30ம் தேதியுடன் இந்த திட்டம் முடிவதாகவும். அதன் பின்னர், இத்திட்டத்தை நீடிக்கும் எண்ணம் மத்திய அரசிற்கு இல்லை என்றும் மத்திய உணவுத் துறை செயலர் சுதன்ஷு பாண்டே அறிவித்திருந்தார். ஆனால் அதன் பிறகு, பல ஆயிரக்கணக்கான மக்கள் தொடர்ந்து அரசிடம் இது தொடர்பாக கோரிக்கை வைத்து வந்தனர்.

விருதுநகரில் நாளை (டிச.21) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின் வாரியம் அறிவிப்பு!

இதனால் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அங்கு இலவச ரேஷன் திட்டம் மேலும் ஆறு மாதங்களுக்கு அதாவது மே 31 வரை நீட்டிக்கப்படும் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக, நாடு முழுவதும் இந்த திட்டத்தை மேலும் 6 மாதம் நீட்டிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது நாட்டில் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு மற்றும் பொருளாதார சூழல் காரணமாக அன்றாட உணவை பெற முடியாத நிலையில் மக்கள் உள்ளதாக தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!