ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு – தவறாமல் படிங்க!
தமிழகத்தில் இலவச ரேஷன் பொருட்கள் பெறும் தகுதியில்லா மற்றும் மோசடி செய்யும் நபர்கள் உடனடியாக ரேஷன் கார்டை சரண்டர் செய்ய வேண்டும் எனவும், தவறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மத்திய அரசு எச்சரித்துள்ளது.
ரேஷன் கார்டு
மத்திய அரசு மக்களுக்கு பொது விநியோகத் திட்டத்தின் மூலம் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள பயனர்களுக்கு மானிய விலையில் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் பல கோடி ஏழை எளிய மக்கள் பயன்பெறுகின்றனர். கொரோனா கால கட்டத்தில் மக்கள் அனைவருக்கும் இலவசமாக ரேஷன் பொருட்கள் வழங்கியது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி தனி தனி குடும்ப ரேஷன் அட்டை தாரர்களுக்கு 1000 ரூ பணம் வழங்கியது. இதனால் மக்கள் அனைவரும் புதிய ரேஷன் கார்டை ஆர்வமுடன் பதிவு செய்து வருகின்றனர்.
சென்னை: இன்று அதிரடியாக உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்!
ரேஷன் பொருட்களை பெற வேண்டும் என்றால் ரேஷன் கார்டில் உங்க பெயர் இருப்பது மிக முக்கியமான ஒன்று. ரேஷன் கார்டில் தற்போது புதிய விதிமுறை அமலுக்கு வந்துள்ளது. அது என்னவென்றால் ரேஷன் கார்டு வைத்திருந்தும் அதைப் பயன்படுத்தாமல் இருந்தால் அந்த ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும். கொரோனா வைரஸ் காலகட்டத்தில் தகுதியில்லாத ஏராளமான ரேஷன் கார்டுதாரர்கள் இலவசமாக ரேஷன் பொருட்களை பெற்று வருவதாக மத்திய அரசுக்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து, தகுதியில்லாத நபர்களுக்கு ரேஷன் பொருட்கள் இலவசமாக செல்வதை தடுக்க மத்திய அரசு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
மேலும், தகுதியில்லாத நபர்கள் உடனடியாக உங்கள் ரேஷன் கார்டுகளை சரண்டர் செய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தகுதி இல்லாத நபர்கள் ரேஷன் கார்டு வைத்துக் கொண்டு இலவசமாக ரேஷன் பொருட்கள் பெற்றால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு பிரத்யேக ரேஷன் கார்டு வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு 10,000 ரூபாய்க்கு கீழ் வருமானம் பெறுவோருக்கு மட்டுமே இந்த ரேஷன் கார்டு வழங்கப்படும் எனவும் 100 சதுர சிட்டுக்கு மேல் நிலம், வீடு, பிளாட், கார், டிராக்டர் வைத்திருப்போர், கிராமங்களில் 2 லட்சம் ரூபாய்க்கு மேலும், நகரங்களில் 3 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் பெறுவோர் அனைவரும் தங்கள் ரேஷன் கார்டை சரண்டர் செய்ய வேண்டும் என எச்சரித்துள்ளனர்.