தமிழக பள்ளி மாணவர்களுக்கு இலவச திட்டம் – அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!

0
தமிழக பள்ளி மாணவர்களுக்கு இலவச திட்டம் - அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!
தமிழக பள்ளி மாணவர்களுக்கு இலவச திட்டம் - அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!
தமிழக பள்ளி மாணவர்களுக்கு இலவச திட்டம் – அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!

தமிழக பள்ளி மாணவர்களின் எதிர்காலத்திற்குகாக, தற்போதைய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சிறப்பாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதை உறுதிப்படுத்தும் விதமாக வரும் 2025 ஆம் ஆண்டில் தமிழ்நாடு கல்வியில் இந்தியளவில் முக்கிய இடம் வகிக்கும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

இலவச திட்டம்:

தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்ததை அடுத்து பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 2 வருடங்களாகவே, 10 முதல் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பள்ளிகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து நடப்பாண்டில் பொதுத் தேர்வுகள் கண்டிப்பாக நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்திருந்தார். அதன்படியே, தமிழகத்தில் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகளும் மற்றும் 1ம்‌ வகுப்பு முதல்‌ 9ஆம்‌ வகுப்பு வரை மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வுகளும் சிறப்பாக நடத்தப்பட்டது

Exams Daily Mobile App Download

மேலும் கோடை விடுமுறை முடிந்து மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு திரும்பி உள்ளனர். இந்நிலையில் மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியில் பள்ளிக்கல்வித் துறை சார்ந்த அலுவலர்களுக்கான நிர்வாகத் திறன் மேம்பாட்டு பயிற்சியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘ எண்ணும் எழுத்தும்’ திட்டத்தை வேகமாக செயல்படுத்த கல்வி அதிகாரிகள், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும் திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மழலையரின் கல்வி திறனை மேம்படுத்தவே இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் அதிகாரிகளுக்கு தலைமைப்பண்பை உருவாக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2025 ஆம் ஆண்டில் கல்வியில் தமிழகம் இந்திய அளவில் முக்கிய இடத்தை வகிக்கும். தேசிய கல்வி கொள்கை பொறுத்தவரை நம் மாநில மாணவர்களுக்கு என்ன கல்வி தேவையோ அதனை தமிழக அரசு வழங்கும். இதை தொடர்ந்து அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் உள்பட 10 உபகரணங்கள் அனைத்து மாணவர்களுக்கும் இலவசமாக வழங்கப்பட வேண்டும். இதற்காக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

TN TRB அரசு பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

மேலும் அரசு பள்ளிகளில் சேதமடைந்த கட்டிடங்களில் மாணவர்களை அனுமதிக்க கூடாது என்று மாநில அளவில் உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி 10,000 க்கும் மேற்பட்ட பள்ளிகளில் கட்டிடங்களை சீரமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here