மீராபாய் சானுவுக்கு வாழ்நாள் முழுவதும் இலவச பீட்ஸா – பிரபல நிறுவனம் அறிவிப்பு!

0
ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற மிராபாய் சானுவுக்கு இலவச பீட்ஸா - வைரலாகும் ட்வீட்!
ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற மிராபாய் சானுவுக்கு இலவச பீட்ஸா - வைரலாகும் ட்வீட்!
ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற மிராபாய் சானுவுக்கு இலவச பீட்ஸா – வைரலாகும் ட்வீட்!

ஜப்பானில் நடைபெற்று வரும் டோக்கியோ ஒலிம்பிக் 2020 போட்டியில் கலந்து கொண்டு இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை பெற்று தந்த மீராபாய் சானுவுக்கு வாழ்நாள் முழுவதும் இலவச பீட்ஸாவை வழங்குவதாக டொமினோஸ் பீட்ஸா நிறுவனம் அறிவித்துள்ளது.

இலவச பீட்ஸா:

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில், இந்தியா சார்பில் கலந்து கொண்ட மீராபாய் சானு பெண்கள் பிரிவில் 49 கிலோ எடைப்பிரிவில் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். இந்த வெற்றியை இந்திய தேசம் முழுவதும் கொண்டாடி வரும் நிலையில், மீராபாய் சானுவுக்கு இலவச பீட்ஸாவை வழங்குவதாக அமெரிக்காவை சேர்ந்த டொமினோஸ் பீட்ஸா நிறுவனம் அறிவித்துள்ளது. அதாவது மீராபாய் சானு பதக்கம் வென்றவுடன் பீட்ஸா சாப்பிட விரும்புவதாகக் கூறியதாக தெரிவித்த டொமினோ பிட்ஸாவின் நிறுவனம், அவரது வாழ்நாள் முழுவதும் இலவச பீட்ஸாவை வழங்குவதாக உறுதியளித்துள்ளது.

அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட், 21.5% அகவிலைப்படி (DA) உயர்வு – மாநில அரசு அறிவிப்பு!

அதாவது டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற பிறகு அடுத்து என்ன செய்யப் போகிறீர்கள் என்று சானுவிடம் கேட்ட போது, பீட்ஸா சாப்பிட்டு நீண்ட நாட்களாகி விட்டதால் முதலில் பீட்ஸா சாப்பிடுவேன் என்று குறிப்பிட்டிருந்தார். இதை தொடர்ந்து டொமினோஸ் பீட்ஸா நிறுவனம், இம்பாலில் அமைந்துள்ள சானுவின் வீட்டுக்கு சென்று, அவரது குடும்பத்தினருக்கு பீட்ஸாக்களை வழங்கியுள்ளது. மேலும் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் இரண்டு படங்களை பகிர்ந்துள்ள அந்நிறுவனம், ‘இந்த அற்புதமான தருணத்தை @mirabai_chanu வின் அன்புக்குரியவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்’ என்று ட்வீட் செய்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

இது தொடர்பாக சானு மேற்கோளிட்டு காட்டிய ஒரு வீடியோ கிளிப் தற்போது ட்விட்டரில் வைரலாகி வருகிறது. அதில் இந்தியாவில் டொமினோஸ் பீட்ஸாவை இயக்கும் ஜூபிலன்ட் ஃபுட்வொர்க்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பிரதிக் பொத்தாதே மீராபாய் சானுவுக்கு பீட்ஸாவை வழங்குமாறு வலியுறுத்தினார். இதனை தொடர்ந்து மூன்று மணி நேரத்திலேயே சானுவின் குடும்பத்திற்கு பீட்ஸாக்களை வழங்கி ட்விட்டரில் புகைப்படங்கள் பதிவிடப்பட்டுள்ளது. இந்த செயலை பலர் பாராட்டி வருகையில், இது டோமினோஸ் நிறுவன விளம்பரத்திற்காக செய்யப்பட்டதாக பலர் குற்றம் சாட்டி உள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here