தமிழகத்தில் மகளிருக்கான இலவச “பிங்க்” நிற பேருந்து சேவை – உதயநிதி MLA துவக்கி வைப்பு!

0
தமிழகத்தில் மகளிருக்கான இலவச
தமிழகத்தில் மகளிருக்கான இலவச "பிங்க்" நிற பேருந்து சேவை - உதயநிதி MLA துவக்கி வைப்பு!
தமிழகத்தில் மகளிருக்கான இலவச “பிங்க்” நிற பேருந்து சேவை – உதயநிதி MLA துவக்கி வைப்பு!

தமிழகத்தில் நகரப் பேருந்துகளில் அனைத்து வயது மகளிருக்கும் இலவசமாக பயணம் மேற்கொள்ள தமிழக முதல்வர் மகளிர் பயண கட்டணமில்லா பேருந்து என்ற திட்டம் நடைமுறையில் உள்ளது. இதனை தொடர்ந்து தற்போது இலவச பேருந்தை ஈஸியாக அடையாளம் காண பேருந்திற்கு பிங்க் நிறம் பூசப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் சில தகவல்களை பார்ப்போம்.

மகளிர் கட்டணமில்லா பேருந்து

தமிழகத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, திமுக தனது வாக்குறுதியில், அனைத்து மகளிரும் நகரப் பேருந்துகளில் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி திமுக ஆட்சி அமைத்ததும், தமிழகத்தின் நகரப் பேருந்துகளில் அனைத்து வயது மகளிரும் இலவசமாக பேருந்துகளில் தங்களின் மாவட்டத்திற்குள் பயணம் மேற்கொள்ளலாம் என்று தமிழக முதல்வர் அறிவிப்பை வெளியிட்டார். இதில் பணிபுரியும் பெண்கள், உயர்கல்வி பயிலும் மாணவியர் உள்ளிட்ட அனைவரும் நகரப் பேருந்தில் இலவசமாக பயணித்து வருகின்றனர்.

Exams Daily Mobile App Download

இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கானோர் பயன் அடைகின்றனர். அத்துடன் மகளிர் கட்டணமில்லா பேருந்தில் பயணிக்கும் மகளிருக்கு, மகளிர் கட்டணமில்லா பயணச்சீட்டு வழங்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்துகளை மக்கள் அடையாளம் காண சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் வயதானவர்கள் சில நேரங்களில் குழப்பத்தில் இலவச பேருந்து என எண்ணி கட்டண பேருந்துகளில் ஏறி விடுகின்றனர். இந்த குழப்பத்தை தீர்க்கும் வகையில் தமிழக அரசு ஒரு சூப்பரான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் குறைவு? மத்திய அரசு பதில்

அதாவது, மகளிர் கட்டணமில்லா பேருந்தை எளிதாக கண்டுபிடிக்க ஏதுவாக மகளிர் கட்டணமில்லா பேருந்தின் முகப்பு பக்கம் மற்றும் பின்புறம் என இரு புறத்திலும் இளஞ்சிவப்பு வண்ணம் பூசப்பட்டுள்ளது. அதனால் இனி மகளிர் கட்டணமில்லா பேருந்தை சுலபமாக அடையாளம் காணலாம். இத்திட்டம் முதற்கட்டமாக சென்னையில் உள்ள நகரப் பேருந்துகளில் செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பெண்களுக்கான ‘பிங்க்’ நிற பேருந்து சேவையை இன்று சென்னையில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!