தமிழகத்தில் 2 வருடங்களாக இலவச லேப்-டாப்கள் வழங்காதது ஏன்? அரசு தரப்பு விளக்கம்!

0
தமிழகத்தில் 2 வருடங்களாக இலவச லேப்-டாப்கள் வழங்காதது ஏன்? அரசு தரப்பு விளக்கம்!
தமிழகத்தில் 2 வருடங்களாக இலவச லேப்-டாப்கள் வழங்காதது ஏன்? அரசு தரப்பு விளக்கம்!
தமிழகத்தில் 2 வருடங்களாக இலவச லேப்-டாப்கள் வழங்காதது ஏன்? அரசு தரப்பு விளக்கம்!

தமிழக அரசு பள்ளி 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச லேப் – டாப் கடந்த 2 வருடங்களாக வழங்கப்படவில்லை. இந்நிலையில் இலவச லேப் – டாப் வழங்க முடியாத காரணத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு விளக்கம்:

தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு, தமிழக அரசின் சார்பில் இலவச லேப் – டாப் வழங்கும் திட்டம் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டது. இந்த திட்ட அடிப்படையில் வருடம் தோறும் மாணவர்களுக்கு இலவச லேப் – டாப் வழங்கப்பட்டு வருகின்றன. இதுவரை தமிழகத்தில் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட இலவச லேப் – டாப்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் 2021, 2022ம் ஆண்டில் பயிலும் மாணவர்களுக்கு இலவச லேப் – டாப்கள் வழங்கப்படாமல் உள்ளன.

சபரிமலை கோவில் பக்கதர்களுக்கான முக்கிய செய்தி – பிப்.12ம் தேதி நடைதிறப்பு!

கொரோனா காலகட்டத்தில் பள்ளி, கல்லூரி வகுப்புகள், வீட்டில் இருந்து வேலை பார்த்தவர்கள் என அனைவருக்கும் அதிக அளவு பயன்பாட்டில் இருந்தது கணினி தான். ஏனென்றால் அனைத்து வகுப்புகளும், பணிகளும் ஆன்லைன் முறையில் நடைபெற்றது. இதனால் கணினியின் தேவை அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழ்க பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப் – டாப் வழங்காமல் இருப்பதற்கு காரணம் என்னவென்றால் தமிழக அரசு வழங்கக்கூடிய இலவச லேப் – டாப்களை தயாரிக்க அரசு அழைப்பு விடுத்த போதிலும் கணினி தயாரிப்பு நிறுவனங்கள் டெண்டரில் பங்கேற்க ஆர்வம் காட்டவில்லை.

ரேஷன் அட்டைதாரர்களுக்கான ஹாப்பி நியூஸ் – ஒரே மாதத்தில் இரு முறை தானிய விநியோகம்!

இந்த வகையில் கொரோனா கால கட்டத்தை பயன்படுத்தி அதிக விலை கொண்ட லேப் – டாப்களை தயாரிக்கவே நிறுவனங்கள் விரும்புவதே டெண்டரில் பங்கேற்க ஆர்வம் கட்டத்திற்கு காரணமாம். இதனால் தான் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய லேப் – டாப்களை சரியான நேரத்தில் வழங்க முடியவில்லை என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவிக்கின்றன. இருப்பினும் விரைவில் மாணவர்களுக்கு இலவச லேப் – டாப்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here