இனி இவர்களுக்கும் இலவச லேப்டாப் – தமிழக அரசு அதிரடி!

0
இனி இவர்களுக்கும் இலவச லேப்டாப் - தமிழக அரசு அதிரடி!
இனி இவர்களுக்கும் இலவச லேப்டாப் - தமிழக அரசு அதிரடி!
இனி இவர்களுக்கும் இலவச லேப்டாப் – தமிழக அரசு அதிரடி!

தமிழகத்தில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டு வந்தது. அதனை தொடர்ந்து தற்போது தொழில்நுட்பவியல் படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ், விலையில்லா மடிக்கணினி, உதவித்தொகை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

விலையில்லா மடிக்கணினி:

கல்வியை ஊக்கப்படுத்துவதற்காக மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இலவச சைக்கிள், சீருடை, இலவச பஸ் பாஸ் முதலியன வழங்கப்பட்டு வருகிறது. அதிமுக தேர்தல் வாக்குறுதியான மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தை தொடங்கியது. இதன் அடிப்படையில் 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்படும். அவ்வாறு மடிக்கணினி பெற்றுக் கொள்ளாத மாணவர்களுக்கு கல்லூரியில் வழங்கப்பட்டது.

தமிழகத்தில் 2021ம் ஆண்டுக்கான முப்பெரும் விழா விருதுகள் – திமுக அறிவிப்பு!

முந்தைய ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சட்டங்களை மறு சீரமைக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது இதன் காரணமாக மடிக்கணினிகள் வழங்கும் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தரமணி சிபிடி வளாகத்துக்குள் செயல்படும் தோல் தொழில்நுட்பப் பயிலகத்தில் தொழில்நுட்பவியல் சார்ந்த பட்டப்படிப்புகள் இயங்கி வருகின்றன. மூன்றரை ஆண்டு நடத்தப்படும் இந்த படிப்பிற்கு வரும் 9ம் தேதி வரை மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மளிகை கடைகள் இயங்க அனுமதி – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

அதேபோல் மூன்றரை ஆண்டுகள் மீன்வள பட்டப்படிப்பு இயங்கி வருகிறது. அதற்கான மாணவர் சேர்க்கையும் வரும் 9ம் தேதி வரை நடைபெறுகிறது. இது போன்ற தொழில்நுட்பவியல் படிப்புகளில் சேரும் மாணவர்களை ஊக்கப்படுத்துவதற்காக அவர்களுக்கு இலவச பஸ் பாஸ், விலையில்லா மடிக்கணினி, உதவித் தொகை ஆகியவை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தொழில் நுட்பவியல் படிப்புகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!