ரூ.3 ஆயிரம் ஊக்கத்தொகை (ம) தங்குமிடத்துடன் ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி – தமிழக அரசு அறிவிப்பு

0
ரூ.3 ஆயிரம் ஊக்கத்தொகை (ம) தங்குமிடத்துடன் ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி - தமிழக அரசு அறிவிப்பு !
ரூ.3 ஆயிரம் ஊக்கத்தொகை (ம) தங்குமிடத்துடன் ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி - தமிழக அரசு அறிவிப்பு !

ரூ.3 ஆயிரம் ஊக்கத்தொகை (ம) தங்குமிடத்துடன் ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி – தமிழக அரசு அறிவிப்பு !

இந்திய குடிமைப்பணிகளுக்கான தேர்வு அடுத்த வருடம் மே 31ம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், தற்போது அதில் ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு தமிழக அரசு சார்பில் ஆறு மாத காலம் இலவச பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பயிற்சி காலங்களில் இலவசமாக உணவும், உறைவிடமும் வழங்கப்படுகிறது. அரசு விதி முறைக்கு உட்பட்டு பதிவு செய்தவர்களில் 225 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு ரூ.3000/- மாதம் ஊக்கத்தொகை வழங்குவதுடன் இலவச பயிற்சியும் நடக்க இருக்கிறது.

ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு 2020:

2020ம் ஆண்டில் மத்திய தேர்வாணைக்குழு (UPSC) நடத்ம் குடிமைப் பணிகளுக்கான முதல் நிலைத் தேர்வு (Preliminary Examination – 2020) எழுதுவதற்கு, அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சி பெற ஆர்வமிக்க தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களிடமிருந்து இணையதள வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கூடுதல் விவரங்களை இப்பயிற்சி மைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கை மூலம் அறிந்து கொள்ளலாம். இப்பயிற்சி மையத்தில் முதல் நிலைத் தேர்வுக்கு ஏற்கனவே முழு நேர பயிற்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம். அதற்கு விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.

ஆறு மாதம் உணவு, உறைவிடம் இலவசமாக வழங்கப்படுகிறது. முழு நேர முயற்சியுடன் தேர்வுக்கு பயிற்சி மேற்கொண்டால், முதல்நிலைத் தேர்வில் எளிதாக வெற்றி பெறலாம். இது தொடர்பான முழுமையான விபரங்களுக்கு தமிழக அரசின் அகில இந்திய குடிமைப்பணித் தேர்வு பயிற்சி மையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Download Notice 2020 Pdf

OFFICIAL SITE

வேலைவாய்ப்பு செய்திகள்

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!