சென்னை பல்கலை சார்பில் இலவச உயர்கல்வி – விண்ணப்பங்கள் வரவேற்பு!

1
சென்னை பல்கலை சார்பில் இலவச உயர்கல்வி - விண்ணப்பங்கள் வரவேற்பு!
சென்னை பல்கலை சார்பில் இலவச உயர்கல்வி - விண்ணப்பங்கள் வரவேற்பு!
சென்னை பல்கலை சார்பில் இலவச உயர்கல்வி – விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழகத்தில் ஏழை மாணவர்களுக்கான இலவச உயர்கல்விக்கு விண்ணப்பிக்கும் முறைகளை சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

உயர்கல்வி விண்ணப்பம்:

தமிழகத்தில் ஏழை, எளிய மாணவர்கள் உயர்கல்வியை பெற வேண்டும் என்பதற்காக சென்னை பல்கலைக்கழகம் இலவச உயர்கல்வி திட்டத்தை அறிமுகப்படுத்தி ஏழை மாணவர்களும் பட்டம் பெறும் வாய்ப்பை நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்த திட்டம் 2010ம் ஆண்டு ஆண்டு தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. தற்போது 2021- 2022ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது. அதற்கு விண்ணப்பிக்கும் முறைகளை சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

இன்று முதல் 3 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!

இத்திட்டத்தின் கீழ் சென்னை பல்கலைக்கழக இணைப்பு கல்லூரிகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் விண்ணப்பிக்க விண்ணப்பதாரர் இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சேருவதற்கான அனைத்து தகுதி சான்றிதழ்களையும் வைத்திருக்க வேண்டும். மேலும் குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும் என சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

தேவையான சான்றிதழ்கள்:

முதலில் 11, 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்று, சமீபத்திய வருமானச் சான்றிதழ், மாற்றுத்திறனாளி சான்றிதழ், ஆதரவற்ற மாணவர் சான்றிதழ், முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ், கணவரால் கைவிடப்பட்ட பெண் சான்றிதழ் போன்ற சான்றுகள் அவசியமாகும்.

TN Job “FB  Group” Join Now

அனைத்து சான்றிதழ்களையும் வெள்ளை நிறத்தில் ஸ்கேன் செய்து, 200 KB முதல் 300 KB அளவில் வைத்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

  • பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதியில் இருந்து 15 நாட்களுக்குள் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதில் சான்றிதழ்களை Upload செய்ய வேண்டும்
  • https://egovernance.unom.ac.in/cbcs2122/UnomFreeEducation/Frm_Eligiblity என்ற இணைய தளத்திற்கு செல்ல வேண்டும்.
  • அதில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதியில் இருந்து 15 நாட்களுக்குள் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
  • அதில் கேட்கப்படும் கேள்விகளை பூர்த்தி செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு: https://egovernance.unom.ac.in/cbcs2122/UnomFreeEducation/login என்ற இணையதளத்தில் பார்க்கவும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!