தமிழகத்தில் இலவச மளிகை பொருட்கள் தேக்கம் – பொருட்களை திரும்ப பெற கோரிக்கை !

0
தமிழகத்தில் இலவச மளிகை பொருட்கள் தேக்கம் - பொருட்களை திரும்ப பெற கோரிக்கை !
தமிழகத்தில் இலவச மளிகை பொருட்கள் தேக்கம் - பொருட்களை திரும்ப பெற கோரிக்கை !
தமிழகத்தில் இலவச மளிகை பொருட்கள் தேக்கம் – பொருட்களை திரும்ப பெற கோரிக்கை !

தமிழகத்தில் தேனி மாவட்டத்தில் ரேஷன் அட்டைதாரர்கள் இலவச மளிகை பொருட்கள் வாங்க வராததால் 9231 பேரின் தொகுப்பு தேக்கமடைந்துள்ளன. 13 கடைகளில் நுாற்றுக்கும் மேற்பட்ட, 26 கடைகளில் 50 க்கும் மேற்பட்ட தொகுப்புகள் தேங்கியுள்ளது என மாவட்ட ரேஷன் கடை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

மளிகை பொருட்கள் தேக்கம் :

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் அனைத்து கடைகள், வணிக வளாகங்கள், நிறுவனங்கள் போன்ற அனைத்தும் மூடப்பட்டது. இதனால் ஏழை எளிய மக்கள் தங்கள் வாழ்வாதாரம் இழந்து சிரமப்பட்டனர். இவர்களின் நலன் கருதி முதல்வர் முக ஸ்டாலின் ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு உதவும் வகையில் கொரோனா நிவாரணத் தொகையை வழங்கினார். அத்துடன் 14 வகை பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பு இலவசமாக வழங்கினார். அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் டோக்கன் வழங்கப்பட்டு பொருட்கள் வழங்கப்பட்டது.

நீட் தேர்வு ஆய்வுக்குழு எதிரான மனு – உயர்நீதிமன்றம் தள்ளுபடி!!

நாள் ஒன்றுக்கு 200 அட்டைகள் வீதம் வரிசையாக பொருட்களும் கொரோனா நிவாரணத்தொகைகளும் வழங்கப்பட்டது. கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக டோக்கனில் நேரம் வழங்கப்பட்டு சமூக இடைவெளியை பின்பற்றி பொருட்கள் வழங்கப்ட்டது. தற்போது தேனி மாவட்டத்தில் ரேஷன் அட்டைதாரர்கள் இலவச மளிகை பொருட்கள் வாங்க வராததால் 9231 பேரின் தொகுப்பு தேக்கமடைந்துள்ளது. நிவாரணத் தொகை பெற்றவர்கள் இலவச மளிகை பொருட்கள் பெற ஆர்வம் காட்டவில்லை என ரேஷன் கடை ஊழியர்கள் கூறுகின்றனர். இதனால் தேனி மாவட்டத்தில் 9231 பேரின் தொகுப்பு தேக்கமடைந்துள்ளன.

TN Job “FB  Group” Join Now

மேலும் 434 கடைகளில் தலா 40,30, 20 என்ற எண்ணிக்கையில் பொருட்கள் உள்ளனர் உள்ளன. அதிகளவு கம்பம் கடை எண் 1ல், 900 கார்டுகளில் 470 பேரும், கடை எண் 4 ல் 1109 பேரில் 329 பேரும் தங்களது இலவச மளிகை தொகுப்பை பெறவில்லை. தேக்கமடைந்த மளிகை தொகுப்பை நீண்ட நாள் இருப்பு வைக்க முடியாது.காலாவதியான பொருட்களுக்கு விற்பனையாளர்கள் அரசுக்கு பணம் செலுத்த நேரிடும். எனவே தேங்கியுள்ள மளிகை தொகுப்பை உடனே திரும்ப பெற கூட்டுறவு துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரேஷன் கடை விற்பனையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here