நகர்ப்புற அரசு மாணவிகளுக்கும் இலவச நாப்கின்- தமிழக அரசு அறிவிப்பு!!!

0
நகர்ப்புற அரசு மாணவிகளுக்கும் இலவச நாப்கின்- தமிழக அரசு அறிவிப்பு!!!
நகர்ப்புற அரசு மாணவிகளுக்கும் இலவச நாப்கின்- தமிழக அரசு அறிவிப்பு!!!

தமிழக அரசு மாதவிடாய் கால தன் சுத்தம் திட்டத்தின் கீழ் நகர்ப்புற அரசு பள்ளி மாணவிகள் மற்றும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உள்நோயாளிகளுக்கு இலவச நாப்கின்கள் வழங்க 44 கோடி ரூபாயை நிதியாக ஒதுக்க அரசாணை வெளியிட்டுள்ளது.

இலவச நாப்கின்கள்:

தமிழகத்தில் மாதவிடாய் காலம் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாமல் பல சிறுமிகளும் பெண்களும் உள்ளன. மாதவிடாய் என்பது ஒரு இயற்கை உபாதை அதுகுறித்து அச்சப்படவோ அசிங்கப்படவோ தேவையில்லை. மக்களிடையே மாதவிடாய் விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ஓலைகள், இலைகள், சுகாதாரமற்ற துணிகள் மூலமாக ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் முறையில் பெரும்பாலான பெண்கள் மாதவிடாயை எதிர்கொள்கின்றனர். இதனால், கர்ப்பப்பை புற்றுநோய் உட்பட பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. கர்ப்பப்பை புற்றுநோய் காரணமாக 27 சதவீத பெண்கள் இறக்கின்றனர். 70 சதவீத இந்திய பெண்களின் குடும்பத்தால் சானிட்டரி நாப்கின்களை வாங்க முடிவதில்லை. இந்த நிலையை மாற்ற கிராமப்புற பெண்களுக்கு தன் சுத்தத்தை மேம்படுத்த அரசு “மாதவிடாய் கால தன் சுத்தம் திட்டத்தின் கீழ் அரசு மாணவிகளுக்கு இலவச நாப்கின் மற்றும் அதனை அப்புறப்படுத்த ஏற்பாடுகள் செய்துகொடுத்துள்ளது.

பள்ளிகள் திறக்க வாய்ப்புக்கள் இல்லை – கல்வித்துறை அறிவிப்பு!!

இந்த திட்டம் நகர்ப்புறத்தில் பயிலும் மாணவியர்களுக்கு விரிவுபடுத்தப்படும் எனவும் மேலும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உள் நோயாளிகளாக சிகிச்சை பெறும் பெண்களுக்கும் சானிட்டரி நாப்கின்கள் வழங்கப்படும் என கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் தெரிவிக்கப்பட்டது.அதன்படி நகர்ப்புற அரசு பள்ளிகளில் பயிலும் 14.91 கோடி மாணவிகளுக்கு வருடத்திற்கு 18 நாப்கின் பைகள் வழங்கப்பட உள்ளன. அதற்காக மட்டும் 34.74 கோடி ரூபாய் ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

BANK
BANK

தற்போது தமிழக அரசு மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறும் பெண்களுக்கு நாப்கின்கள் வழங்க 9 கோடி ரூபாயை ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நகர்ப்புற அரசு பள்ளி மாணவிகளுக்கு வழங்கப்படும் நாப்கின்கள் அந்தந்த பள்ளிகளுக்கே நேரடியாக வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!