ஒரே நாளில் 1.08 லட்சம் பேருக்கு இலவச உணவு.. மாநகராட்சி அறிவிப்பு.. விவரம் உள்ளே!!
வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் கன மழை பெய்து வந்தது. இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்து வந்த கனமழை காரணமாக சென்னை நகரத்தின் பல இடங்கள் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளித்து வருகிறது.
இந்நிலையில் மழை காரணமாக நேற்றும் (அக்டோபர் 16) இன்றும் (அக்டோபர் 17) சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி சென்னையில் அம்மா உணவகங்கள் மூலம் நேற்று ஒரே நாளில் 1.08 லட்சம் பேருக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டது என சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது.
























