Jio, Airtel மற்றும் Vi வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – இலவசமாக Disney+ Hotstar!

0
Jio, Airtel மற்றும் Vi வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - இலவசமாக Disney+ Hotstar!
Jio, Airtel மற்றும் Vi வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - இலவசமாக Disney+ Hotstar!
Jio, Airtel மற்றும் Vi வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – இலவசமாக Disney+ Hotstar!

ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனம் தற்போது டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தாவுடன் இணைந்த எக்கச்சக்கமான ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்திருக்கிறது. மேலும், அதற்கான அதற்கான முழு விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ரீசார்ஜ் திட்டம்

நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா போன்ற நிறுவனங்கள் அவ்வப்போது அதிரடி ஆஃபர்களை அறிமுகம் செய்து கொண்டிருக்கிறது. தற்போது கிரிக்கெட் சீசன் என்பதால் அதற்கு தந்தாற்போல OTT சலுகைகளை அறிமுகம் செய்திருக்கிறது. மேலும், இந்த நிறுவனங்கள் குறிப்பிட்ட ரீசார்ஜ் திட்டங்களுடன் சேர்த்து Disney+ Hotstar சந்தா திட்டத்தையும் வழங்குகிறது. தற்போது, Jio, Airtel மற்றும் Vi அறிமுகம் செய்துள்ள ரீசார்ஜ் திட்டங்கள் பற்றி பார்க்கலாம்.

28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரூ.333 ரீசார்ஜ் திட்டத்தில் தினசரி 1.5ஜிபி டேட்டா, இலவச குரல் அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 3 மாத டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா வழங்கப்படுகிறது. அதே போல 28 நாட்கள் வேலிடிட்டிரூ.419 திட்டத்தில் தினசரி 3 ஜிபி டேட்டா, இலவச குரல் அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 3 மாத டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா வழங்கப்படுகிறது. அடுத்ததாக 56 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரூ.583 ரீசார்ஜ் திட்டத்தில் தினசரி 1.5ஜிபி டேட்டா, இலவச குரல் அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 3 மாத டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா வழங்கப்படுகிறது.

மேலும், 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரூ.499 ரீசார்ஜ் திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா, இலவச குரல் அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 1 வருட டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா வழங்கப்படுகிறது. அதே போல 56 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரூ.799 ரீசார்ஜ் திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா, இலவச குரல் அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 1 வருட டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவுடன், ஜியோ ஆப் பலன்களும் வழங்கப்படுகிறது. அடுத்ததாக, 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரூ.1066 ரீசார்ஜ் திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா, இலவச குரல் அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 1 வருட டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா வசதி வழங்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல் டேட்டா வரம்பு முடிந்தாலும் கூட லைவ் ஸ்ட்ரீமிங்கை தொடர கூடுதலாக 5ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

மேலும், 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரூ.1409 ரீசார்ஜ் திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா, இலவச குரல் அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 1 வருட டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தா வசதி வழங்கப்படுகிறது. அதே போல, 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரூ.1499 ரீசார்ஜ் திட்டத்தில் தினசரி 3 ஜிபி டேட்டா, இலவச குரல் அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 1 வருட டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தா வசதி வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் விமான நிலையத்தில் பயணிகளுக்காக புதிய வசதி – இயக்குனர் அறிவிப்பு!

இதனையடுத்து, ஏர்டெல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ரீசார்ஜ் திட்டங்கள் பற்றி பார்க்கலாம். முதலில், 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரூ.399 ரீசார்ஜ் திட்டத்தில் தினசரி 2.5 ஜிபி டேட்டா, இலவச குரல் அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 3 மாத டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா வசதி வழங்கப்படுகிறது. அதே போல, 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரூ.839 ரீசார்ஜ் திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா, இலவச குரல் அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 3 மாத டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா வசதி வழங்கப்படுகிறது. மேலும், 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரூ.599 ரீசார்ஜ் திட்டத்தில் தினசரி 3 ஜிபி டேட்டா, இலவச குரல் அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 1 வருடத்திற்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா வசதி வழங்கப்படுகிறது.

அடுத்ததாக ஒரு வருடம் முழுவதும் செல்லுபடியாகும்படியான ரூ.3359 ரீசார்ஜ் திட்டத்தில் தினசரி 2.5 ஜிபி டேட்டா, இலவச குரல் அழைப்பு, ஒரு நாளைக்கு 100 SMS மற்றும் 1 வருடத்திற்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா வசதி வழங்கப்படுகிறது. தற்போது வோடாபோன் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ரீசார்ஜ் திட்டங்கள் பற்றி பார்க்கலாம். அதாவது, 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரூ.499 ரீசார்ஜ் திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா, இலவச குரல் அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 1 வருடத்திற்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா வசதி வழங்கப்படுகிறது. மேலும், 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரூ.601 ரீசார்ஜ் திட்டத்தில் தினசரி 3 ஜிபி டேட்டா, இலவச குரல் அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 1 வருடத்திற்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா வசதி வழங்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!