திருப்பதி இலவச தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – 7 நாட்கள் வரை காத்திருப்பு!

0
திருப்பதி இலவச தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு - 7 நாட்கள் வரை காத்திருப்பு!
திருப்பதி இலவச தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு - 7 நாட்கள் வரை காத்திருப்பு!
திருப்பதி இலவச தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – 7 நாட்கள் வரை காத்திருப்பு!

திருப்பதியில் நேரடி முறையில் இலவச தரிசன டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது ஏழுமலையானை தரிசிக்க இலவச தரிசன டிக்கெட் பெற்றவர்கள் 7 நாட்கள் வரை காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

திருப்பதி:

இந்தியாவில் பரவ தொடங்கிய கொரோனா பெருந்தொற்று காரணமாக நேரடி முறையில் பக்தர்களுக்கான தரிசன டிக்கெட் விநியோகம் ஆன்லைன் மூலமாகவே நடைபெற்று வந்தது. ஒவ்வொரு மாதமும் 20ம் தேதி முதல் அடுத்த மாதத்திற்கான டிக்கெட் விநியோகம் தொடங்கும். கொரோனா அச்சறுத்தல் காரணமாக ஆரம்பத்தில் குறைந்த அலையில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். அதன் கொரோனா குறைந்து வரும் சூழலை ஆராய்ந்து அதற்கேற்றவாறு கூடுதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. எப்போதும் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு தொடங்கியதும் 20 நிமிடங்களில் விற்று தீர்ந்து விடுகிறது.

TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 – உடனே பாருங்க!

இதனால் நெட் ஒர்க் வசதி அதிகம் கிடைக்காத இடங்களில் உள்ளோர் டிக்கெட் முன்பதிவு செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது. தற்போது ஆந்திராவில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருவதால் மீண்டும் அனைத்து பூஜைகளுக்கு பக்தர்களை அனுமதிக்க தேவஸ்தானம் திட்டமிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது இலவச தரிசன டிக்கெட்டுகள் பிப்ரவரி 16ஆம் தேதி முதல் நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும் திருப்பதியில் உள்ள ஸ்ரீனிவாசம் விருந்தினர் மாளிகை வளாகம், கோவிந்தராஜ சுவாமி சத்திரம், அலிபிரி அருகே உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ் ஆகிய 3 இடங்களில் இலவச தரிசன டிக்கெட்டுகள் நாளொன்றுக்கு 10 ஆயிரம் டிக்கெட்டுகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

TNPSC குரூப் 2, 2A காலிப்பணியிடங்களுக்கான தேர்வு – தேதி மாற்றம்? முக்கிய கோரிக்கை!

இலவச டிக்கெட் பெற நினைப்பவர்கள் தங்களது ஆதார் அட்டைகளை காண்பித்து டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம். நேரடி இலவச டிக்கெட் விநியோகம் தொடங்கியதால் தற்போது பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் இலவச தரிசன டிக்கெட் பெற்ற பக்தர் ஒருவர் திருமலைக்கு வந்து ஏழுமலையானை தரிசனம் செய்ய குறைந்தபட்சம் 7 நாட்கள் வரை ஆகிறது என்று தேவஸ்தான அதிகாரி கூறுகிறார். மேலும் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு 2 டோஸ் கொரோனா தடுப்பூசி, கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here