தமிழகத்தில் LKG முதல் 12 ஆம் வகுப்பு வரை இலவச கட்டாயக் கல்வி – அரசுக்கு கோரிக்கை!

0
தமிழகத்தில் LKG முதல் 12 ஆம் வகுப்பு வரை இலவச கட்டாயக் கல்வி - அரசுக்கு கோரிக்கை!
தமிழகத்தில் LKG முதல் 12 ஆம் வகுப்பு வரை இலவச கட்டாயக் கல்வி - அரசுக்கு கோரிக்கை!
தமிழகத்தில் LKG முதல் 12 ஆம் வகுப்பு வரை இலவச கட்டாயக் கல்வி – அரசுக்கு கோரிக்கை!

தமிழகத்தில் LKG முதல் 8 ஆம் வகுப்பு வரையுள்ள அனைத்து மாணவர்களுக்கும் கட்டாய கல்வி என்ற நடைமுறையை மாற்றி 12 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கும் இலவச கல்வி முறையை அமல்படுத்த வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

கட்டாயக்கல்வி

ஆரம்பள்ளி முதல் நடுநிலைப்பள்ளி வரையுள்ள அரசுப் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்வி திட்டத்தின் கீழ் கல்வி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மெட்ரிக், CBSE, ICSI உள்ளிட்ட பள்ளிகளில் இடம் கிடைக்காத, வாய்ப்புகள் மறுக்கப்பட்ட நலிவடைந்த மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினரை சேர்ந்தவர்களுக்கு, அரசுப்பள்ளிகளில் நுழைவுநிலை வகுப்புகளில் (LKG) 25% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.

தமிழக அரசு பேருந்து பயணிகள் கவனத்திற்கு – ‘இது’ கட்டாயம்!

இந்த இலவச கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு அவர்கள் 8 ஆம் வகுப்பு படிக்கும் வரை செலவாகும் அனைத்து கட்டணத்தையும் அரசு ஏற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் கீழ் தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் சேர விரும்புபவர்கள் ஜூலை 5ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 3 ஆம் தேதிக்குள் rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை செலுத்தும் படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் புதிய மாணவர் சேர்க்கை குறித்து தமிழ்நாடு இளைஞர் கட்சியின் பொது செயலாளர் ராஜசேகர் தமிழக முதல்வருக்கு ஒரு கோரிக்கையை விடுத்துள்ளார்.

TN Job “FB  Group” Join Now

அதில், ‘தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு படித்து முடிக்கும் பள்ளி மாணவர்களில் ஒரு ஆண்டுக்கு 65% பேர் மட்டுமே உயர்கல்வி படிக்கிறார்கள். அதாவது பள்ளிக் கல்வியை முடிக்கும் 35% மாணவர்களது குடும்பத்தில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் உயர்கல்விக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. அதனால் தமிழக அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமையை, 12 ஆம் வகுப்பு வரை கொண்டு வந்தால் மாணவர்களின் கல்வி இடைநிறுத்தம் தவிர்க்கப்படும். இந்த கோரிக்கையை அரசு ஏற்று முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!