தமிழகத்தில் மகளிருக்கு இலவச பேருந்து பயணம் – போக்குவரத்துத்துறை அமைச்சர் முக்கிய அறிவுரை!

0
தமிழகத்தில் மகளிருக்கு இலவச பேருந்து பயணம் - போக்குவரத்துத்துறை அமைச்சர் முக்கிய அறிவுரை!
தமிழகத்தில் மகளிருக்கு இலவச பேருந்து பயணம் - போக்குவரத்துத்துறை அமைச்சர் முக்கிய அறிவுரை!
தமிழகத்தில் மகளிருக்கு இலவச பேருந்து பயணம் – போக்குவரத்துத்துறை அமைச்சர் முக்கிய அறிவுரை!

தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று முதல்வர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் மகளிர் மற்றும் பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தனது துறை ஊழியர்களுக்கு முக்கிய அறிவுரைகளை வழங்கினார்.

அமைச்சர் அறிவுரை:

தமிழகத்தில் கடந்த வருடம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது திமுகவினர் தேர்தல் வாக்குறுதியில் பெண்களுக்கு கட்டணமில்லா இலவச பேருந்து பயண திட்டம் கொண்டு வரப்படும் என்று தெரிவித்தனர். பிறகு ஆட்சிக்கு வந்தவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முதல் கட்டமாக மகளிருக்கு இலவச பேருந்து பயண திட்டத்தை அமல்படுத்தினார். இத்திட்டம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் அரசு நகர பேருந்துகளில் பயணிக்கும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியது. இந்த நிலையில் இலவச பேருந்து திட்டம் குறித்து பல்வேறு புகார்களும் எழுந்தது.

அதாவது பேருந்துகள் உரிய நிறுத்தங்களில் நிற்பதில்லை. பயணிகள் ஏறும் முன்பே பேருந்தை இயக்குகின்றனர். மேலும் பயணத்தின் போது தகாத வார்த்தைகளால் நடத்துனர்கள் பேசுகிறார்கள் என்று அடுக்கடுக்காக குற்ற சாட்டுகள் முன் வைக்கப்பட்டது. இது குறித்து அரசு போக்குவரத்து அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கைள் எடுக்கப்பட்டது. இந்த நிலையில் போக்குவரத்து கழக செயல்பாடுகள் குறித்து நேற்று சென்னை தலைமை செயலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

தமிழக அரசு ஊழியர்களுக்கு 25% போனஸ்? தொழிற்சங்கங்கள் வைத்துள்ள கோரிக்கை!

Exams Daily Mobile App Download

அப்போது பேசிய போக்குவரத்து துறை அமைச்சர், அரசின் இலவச மகளிர் பயண திட்டத்தின் மூலம் அரசு நகரப் பேருந்துகளில் 173 கோடி பெண்கள் பயணம் செய்து வருகின்றனர். இத்திட்டத்தை மேலும் சிறப்பிக்க ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள், பேருந்தில் பயணிக்கும் பெண்களை மரியாதையுடன் நடத்த வேண்டும். மேலும் மகளிர் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு எவ்வித இடர்பாடும் ஏற்படாத வண்ணம் பேருந்துகளை இயக்கிட வேண்டும் என்று ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!