தமிழக அரசு பேருந்துகளில் கட்டணமில்லா இலவச பயணம் – போக்குவரத்துத்துறை முக்கிய அறிவிப்பு!

0
தமிழக அரசு பேருந்துகளில் கட்டணமில்லா இலவச பயணம் - போக்குவரத்துத்துறை முக்கிய அறிவிப்பு!
தமிழக அரசு பேருந்துகளில் கட்டணமில்லா இலவச பயணம் - போக்குவரத்துத்துறை முக்கிய அறிவிப்பு!
தமிழக அரசு பேருந்துகளில் கட்டணமில்லா இலவச பயணம் – போக்குவரத்துத்துறை முக்கிய அறிவிப்பு!

தமிழக அரசு பேருந்துகளில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, இலவச பயண திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும் என்று போக்குவரத்து துறை முதன்மை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

இலவச பயண திட்டம்:

தமிழகத்தில் திமுகவினர் கடந்த 2021 ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது அனைத்து அரசு நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயண திட்டம் கொண்டு வரப்படும் என்று வாக்குறுதி அளித்தனர். அதன்படி திமுக ஆட்சிக்கு வந்தவுடன் செயல்படுத்திய முதல் 5 வாக்குறுதிகளில் ஒன்றாக இந்த மகளிருக்கான இலவச பேருந்து பயண திட்டத்தை நடைமுறைப்படுத்தினார்கள். இதனால் பெண்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த திட்டம் வந்த பிறகு அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அதே நேரம் கட்டணம் இன்றி பயணிகள் அனுமதிக்கப்படுவதால் போக்குவரத்து துறை பெரும் சரிவை சந்தித்தது.

தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயது மீண்டும் உயர்வு? வலுக்கும் கோரிக்கை!

இதனை சரி செய்ய பயண கட்டணத்தை உயர்த்த போவதாக தகவல்கள் வெளியானது. மகளிரை தொடர்ந்து தமிழக பேருந்துகளில் 3 – 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு அரை கட்டணத்தில் பயணச்சீட்டு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 5 ஆம் தேதி சட்டப்பேரவையில் நடைபெற்ற மானியக்கோரிக்கை விவாதத்தின் போது பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் அனைத்து வகை அரசு பேருந்துகளில் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார்.

Exams Daily Mobile App Download

இதனையடுத்து 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, இலவச பயண திட்டத்தை உடனே அமல்படுத்த போக்குவரத்து துறை முதன்மை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை, இலவச பயணத்துக்கு அனுமதிக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து 5 – 12 வரையிலான குழந்தைகளுக்கு அரை கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!