நவ.8 முதல் 1 – 8 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு | மதிய உணவு & இலவச பேருந்து வசதி!

0
நவ.8 முதல் 1 - 8 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு | மதிய உணவு & இலவச பேருந்து வசதி!
நவ.8 முதல் 1 - 8 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு | மதிய உணவு & இலவச பேருந்து வசதி!
நவ.8 முதல் 1 – 8 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு | மதிய உணவு & இலவச பேருந்து வசதி!

புதுச்சேரியில் நாளை மறுநாள் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. அதனால் 1 முதல் 8 வகுப்பு மாணவர்களுக்கு மதிய உணவு மற்றும் இலவச பேருந்து வசதி உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது என கல்வி அமைச்சர் ஏ.நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

மதிய உணவு வழங்குதல்:

நாடு முழுவதும் கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்றால் பள்ளிகள், கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டன. கொரோனா குறைந்து வருவதை தொடர்ந்து மாணவர்களின் கற்றலை கருத்தில் கொண்டு கடந்த செப்.1ம் தேதி உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. அதனை தொடர்ந்து தமிழகத்தில் கடந்த நவ.1ம் தேதி தொடக்க மற்றும் நடுநிலை பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது.

தனது குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடிய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கண்ணன் – யூடுப் சேனல் வீடியோ!

தமிழகத்தை பின்பற்றும் புதுச்சேரி அரசு நவம்பர் முதல் வாரத்தில் உள்ள பல்வேறு பண்டிகைகளின் காரணமாக நாளை மறுநாள் நவ.8ம் தேதி 1 முதல் 8 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிய உணவு மற்றும் இலவச பேருந்து வசதி வழங்கும் ஏற்பாடுகள் நடந்து கொண்டிருப்பதாக அம்மாநில கல்வித்துறை அமைச்சர் ஏ.நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

ரீஎன்ட்ரி கொடுக்கும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ லட்சுமி அம்மா – ரசிகர்கள் உற்சாகம்!

மாணவர்கள் 19 மாதங்களுக்கு பிறகு பள்ளிக்கு வருகை புரிய இருப்பதால் அவர்களை மன ரீதியாக மகிழ்ச்சியூட்டும் விதமாக புதுச்சேரியில் லாஸ்பேட்டையில் உள்ள மதிய உணவு வழங்கும் கூடத்தை அமைச்சர் அவர்கள் பார்வையிட்டுள்ளார். ‘அக்ஷயபாத்திரம்’ என்ற திட்டத்தின் கீழ் புதுவித உணவுகளை காலை உணவாக வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் அவர்கள் கூறியுள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு வரும் மாணவர்களின் மன அழுத்தத்தை போக்கும் விதமாக இலவச பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here