தமிழக ஊழியர்களுக்கு நிரந்தர பணி மற்றும் இலவச பஸ்பாஸ் – அமைச்சர் தகவல்!

0
தமிழக ஊழியர்களுக்கு நிரந்தர பணி மற்றும் இலவச பஸ்பாஸ் - அமைச்சர் தகவல்!
தமிழக ஊழியர்களுக்கு நிரந்தர பணி மற்றும் இலவச பஸ்பாஸ் - அமைச்சர் தகவல்!
தமிழக ஊழியர்களுக்கு நிரந்தர பணி மற்றும் இலவச பஸ்பாஸ் – அமைச்சர் தகவல்!

தமிழகத்தில் சுகாதாரத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் ‘ஆஷா’ பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் மற்றும் இலவச பஸ்பாஸ் வழங்க மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

ஆஷா பணியாளர்கள்:

தமிழகத்தில் தேசிய கிராமப்புற சுகாதாரத் திட்டத்தின் கீழ் செயல்படுபவர்கள் தான் ஆஷா பணியாளர்கள். இத்தகைய ஆஷா பணியாளர்கள் மத்திய, மாநில அரசுகளின் அனைத்து நலத்திட்டங்களையும் கிராமபுறங்களில் உள்ள மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செயல்படுத்தி வருகின்றனர். ஒவ்வொரு காலகட்டங்களில் பரவி வரும் நோய்த் தொற்றுகள் குறித்து கிராமபுற மக்களிடம் விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர். தற்போது நிலவிய கொரோனா காலத்தில் கூட அரசின் அனைத்து தடுப்பு திட்டங்களையும் கிராம மக்களிடையே கொண்டு சேர்த்து விழிப்புணர்வை ஏற்படுத்தி முன்கள பணியாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். மேலும் கொரோனா காலகட்டத்தில் அவர்களது பணி மருத்துவர்களுக்கு பேருதவியாக அமைந்தது. எனினும் இவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படாமல் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் வரை சம்பளத்திற்கு பணியாற்றி வருகின்றனர். இவ்வாறு 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஆஷா பணியாளர்கள் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் தொடங்க சிறந்த வங்கி எது? முழு விபரங்கள் இதோ!

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு கோரி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டம் நடைபெற்றது. அதேபோல் வால்பாறை ஆரம்ப சுகாதார நிலையம் முன்பும் போராட்டம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து தமிழ்நாடு ஆஷா பணியாளர்கள் சங்கம் சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அண்ணா அரங்கத்தில் மாநில கோரிக்கை மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் 1000க்கும் மேற்பட்ட பெண் களப்பணியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் சுப்புராயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். 12ம் வகுப்பு முடித்து 42 வயதிற்கு மேலான ஆஷா பணியாளர்களுக்கு நிரந்தர கிராம சுகாதார செவிலியர் பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அவர்களுக்கு அனைத்து நகர பேருந்துகளிலும் இலவசமாக பயணிக்கும் வகையில் இலவச பஸ்பாஸ் வழங்கப்பட வேண்டும்.

ஆன்லைன் மூலம் இ – ஆதார் கார்டு பெறுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

ஆஷா பணியாளர்களுக்கென்று தனி அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. பின்னர் ஒன்றிய அரசிடம் ஆஷா பணியாளர்கள் குறித்தான கோரிக்கைகளை ஒன்றிய அமைச்சர் இடத்தில் எடுத்துரைத்து முடிந்தவரை அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். மேலும் ஆஷா தொழிலாளர்களின் 2,650 குடும்பங்களை திருப்திப்படுத்தும் அளவிலான செயல்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார். தற்போது பருவமழை நெருங்க உள்ள நிலையில் தமிழ்நாடு முழுவதும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் மழலையர் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் மத்திய அரசு குழந்தைகளுக்கான தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கும் பட்சத்தில் குழந்தைகளுக்கான தடுப்பூசி சிறந்த முறையில் செலுத்த தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது. இவ்வாறாக அவர் கூறியதனால் ஆஷா பணியாளர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!