தமிழக பணியிடங்களில் பூஸ்டர் தடுப்பூசி இலவசம் – மத்திய அரசு அறிவிப்பு!

0
தமிழக பணியிடங்களில் பூஸ்டர் தடுப்பூசி இலவசம் - மத்திய அரசு அறிவிப்பு!
தமிழக பணியிடங்களில் பூஸ்டர் தடுப்பூசி இலவசம் - மத்திய அரசு அறிவிப்பு!
தமிழக பணியிடங்களில் பூஸ்டர் தடுப்பூசி இலவசம் – மத்திய அரசு அறிவிப்பு!

இந்தியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் வேகமெடுத்து வருகின்றது. அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக ஒரு புறம் நடைபெற்று வருகிறது. மேலும் 2 டோஸ் தடுப்பூசியை தொடர்ந்து பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பூஸ்டர் தடுப்பூசி:

நாடு முழுவதும் கடந்த சில வருடங்களாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருப்பதாக கருதப்படுகிறது. இன்னும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக கையாளப்படாத காரணத்தால் கொரோனா பாதிப்பு மாறி மாறி பதிவாகி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பாதிப்பு எண்ணிக்கையை குறைக்க அரசு பல்வேறு நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் பாதிப்பு உயர்வதால் விரைந்து தடுப்பூசிகளை செலுத்தி கொள்ள அரசு பொது மக்கள் அனைவரையும் அறிவுறுத்தி வருகிறது.

Exams Daily Mobile App Download

தற்போது நாடு முழுவதும் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பூஸ்டர் செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. ஊழியர்கள் பணியாற்றும் பணியிடங்களில் தகுதி வாய்ந்தவர்களுக்கு இலவச பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடுவதற்கு சிறப்பு முகாம்களை ஏற்பட்டு செய்யுமாறு அனைத்து துறைகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக மின்சார துறையில் 10 ஆம் வகுப்பு முடித்தவருக்கான வேலைவாய்ப்பு !

மார்ச் 16ம் தேதி முதல் சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் இலவசமாக போடப்பட்டது. 8 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் அரசு தடுப்பூசி மையங்களில் 75 நாட்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்த சிறப்பு முகாம் தொடங்கப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி நாட்டில் 98 சதவீதம் பேர் குறைந்தது ஒரு தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர். 90 சதவீதம் பேர் இரண்டாவது தவணை செலுத்தி உள்ளனர். பூஸ்டர் டோஸ்க்கு தகுதியானவர் கட்டாயம் செலுத்தி கொள்ள வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!