தமிழக கல்லூரி மாணவர்களுக்கான இலவச 2GB டேட்டா கார்டு – எதிர்க்கட்சி தலைவர் வேண்டுகோள்!

0
தமிழக கல்லூரி மாணவர்களுக்கான இலவச 2GB டேட்டா கார்டு - எதிர்க்கட்சி தலைவர் வேண்டுகோள்!
தமிழக கல்லூரி மாணவர்களுக்கான இலவச 2GB டேட்டா கார்டு - எதிர்க்கட்சி தலைவர் வேண்டுகோள்!
தமிழக கல்லூரி மாணவர்களுக்கான இலவச 2GB டேட்டா கார்டு – எதிர்க்கட்சி தலைவர் வேண்டுகோள்!

தமிழக கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இலவச டேட்டா கார்டுகளை புதுப்பித்து தருமாறு அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலவச டேட்டா கார்டு:

கடந்த 2020ம் கல்வி ஆண்டு முதல் நாட்டில் கொரோனா தொற்று பரவல் பாதிப்பு காரணமாக ஆன்லைன் முறையில் மட்டுமே வகுப்புகள் நடக்கிறது. இதனால் ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள் இணைய வசதி இல்லாமல் மிகவும் சிரமப்பட்டனர். இதனால் அனைத்து மாணவர்களுக்கும் பலனளிக்கும் வகையில் கடந்த அதிமுக அரசு அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளை சேர்ந்த மாணவர்களுக்கு ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை இலவசமாக தினமும் 2 ஜிபி டேட்டா கார்டுகளை வழங்கியது.

திருச்சியில் கோவில் பாதுகாப்பு பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

இதன் மூலம் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரிகள் மற்றும் கல்வி உதவித்தொகை பெறும் சுயநிதி கல்லூரிகளில் பயிலும் 9 லட்சத்து 69 ஆயிரத்து 47 மாணவர்கள் பயனடைந்தனர். இந்த திட்டம் எல்காட் நிறுவனம் மூலம் செயல்படுத்தியது. இந்நிலையில், புதிதாக திமுக தலைமையிலான அரசு ஆட்சியில் உள்ளது. மேலும், மாணவர்களுக்கு புதிய கல்வியாண்டு தொடங்கி ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டு விட்டது.

TN Job “FB  Group” Join Now

இந்நிலையில் தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசுக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏழ்மையான குடும்பங்களை சேர்ந்த மாணவர்களால் மாதம் 200 முதல் 400 ரூபாய் வரை செலவு செய்து டேட்டா கார்டுகளை புதுப்பிக்க முடியாது. எனவே மாணவர்களுக்கான டேட்டா கார்டுகளை புதிப்பித்து தருவதோடு, புதிதாக கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கும் இலவச டேட்டா கார்டுகளை வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!