தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் மோசடி – நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

0
தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் மோசடி - நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் மோசடி - நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் மோசடி – நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

தமிழகத்தில் செயல்பட்டு வரும் 100 நாள் வேலை திட்டத்தில் பல்வேறு மோசடிகள் நடைபெற்று வருவதாக புகார்கள் எழுந்துள்ளது. இதை தடுக்க அதிகாரிகள் உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

100 நாள் வேலை திட்டம்:

இந்தியாவில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தின் கீழ் கிராமப்புற மக்களுக்கு ஒரு வருடத்தில் 100 நாட்கள் உடல் உழைப்பு சார்ந்த வேலை அளிக்கப்படுகிறது. அவர்களுக்கு தகுந்த ஊதியமும் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் 100 நாட்களுக்கு மேல் மாநில அரசு கூடுதலாக 50 நாட்கள் வேலை வழங்கினால் தனது சொந்த நிதியில் இருந்து ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவும் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் பல்வேறு மோசடிகள் நடைபெறுவதாக புகார்கள் எழுந்துள்ளது.

அம்மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்கள் மற்றும் 526 ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதில் செடி, மரங்களை அகற்றுதல், தடுப்பணை மற்றும் அரசு கட்டிடங்கள் கட்டுவது, கால்வாய் சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணியை மேற்கொள்ளும் ஊழியர்களுக்கு தினதோறும் 273 ரூபாய் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டு வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. குறைந்தபட்சம் 100 பயனாளிகளுக்கு, ஒரு பணித்தள பொறுப்பாளர் நியமிக்கபட்டு பணியாளரின் வேலை, வருகை பதிவு உள்ளிட்டவற்றை கண்காணித்து வருகின்றனர்.

சேலம் மாவட்ட மக்களுக்கு ஹாப்பி நியூஸ் – தமிழகத்தின் சிறந்த மாநகராட்சியாக தேர்வு!

இந்த பணித்தள பொறுப்பாளர்கள் தங்களுக்கு வேண்டப்பட்ட நபர்களுக்கே பணி வழங்குகின்றனர். பிற வேலைகளுக்கு செல்லும் பெண்களின் பெயரில் 100 நாள் திட்ட பணிக்கான அட்டை வாங்கி, அவர்கள் பணிக்கு வந்தது போல் கணக்கு காட்டி, ஊதியம் பெறுகின்றனர். மேலும் சுழற்சி முறையில் பணி தள பொறுப்பாளர்கள் நியமிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது என்று அடுக்கடுக்காக குற்ற சாட்டுகள் எழுந்துள்ளது. இந்த முறைகேடை தவிர்க்க, புகைப்படம் எடுப்பதுடன், பயனாளிகளின் கை விரல் ரேகையை வருகை பதிவேட்டில் பதிய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!