8ம் வகுப்பு முடித்தவர்கள் மாத வருமானத்திற்கு வழி சொல்லும் Post Office – முழு விபரங்கள் இதோ!

0
8ம் வகுப்பு முடித்தவர்கள் மாத வருமானத்திற்கு வழி சொல்லும் Post Office - முழு விபரங்கள் இதோ!
8ம் வகுப்பு முடித்தவர்கள் மாத வருமானத்திற்கு வழி சொல்லும் Post Office - முழு விபரங்கள் இதோ!
8ம் வகுப்பு முடித்தவர்கள் மாத வருமானத்திற்கு வழி சொல்லும் Post Office – முழு விபரங்கள் இதோ!

மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் அஞ்சல் துறையின் மூலம் 5 ஆயிரம் முதலீடு செய்து பிரான்சைஸ் தொடங்கி லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம். இந்த திட்டம் தொடங்குவதற்கான தகுதி மற்றும் சம்பளம் உள்ளிட்ட விபரங்களை இந்த பதிவில் காணலாம்.

பிரான்சைஸ் தொடங்குதல்:

மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் அஞ்சல் துறை மக்களுக்கு நலன் தரும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மக்களும் அஞ்சல் துறை திட்டங்களை மிகவும் பாதுகாப்பானதாக கருதி அஞ்சல் சேமிப்பில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஏனெனில் ஒரு சில திட்டங்களில் வங்கிகளை காட்டிலும் அஞ்சல் துறைகள் கூடுதல் வட்டிகள் வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது ரூ.5 ஆயிரம் முதலீடு செய்து லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் வேலைவாய்ப்பை அஞ்சல் துறை வழங்கி வருகிறது.

TNPSC அரசு போட்டித் தேர்வர்கள் கவனத்திற்கு – இலவச பயிற்சி வகுப்புகள் ஆரம்பம்!

நாடு முழுவதும் 1.50 லட்சம் அஞ்சல் நிலையங்கள் இருந்தாலும் அனைத்து இடங்களிலும் தபால் நிலையங்கள் இல்லாத காரணத்தால் இந்த பிரான்சைஸ் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த வகையில் அஞ்சல் துறை தனது வாடிக்கையாளர்களுக்கு 2 விதமான பிரான்சைஸ் திட்டங்களை வழங்கி வருகிறது. அவற்றில் ஒன்று தபால் நிலைய பிரான்சைஸ் மற்றொன்று தபால் நிலைய முகவர் பிரான்சைஸ் ஆகும். அந்த வகையில் தபால் நிலைய முகவர் என்பவர் கிராம மற்றும் நகர்ப்புறங்களில் வீடு, வீடாக சென்று ஸ்டாம்ப் மற்றும் எழுது பொருட்கள் வழங்குபவர் ஆவார். இந்த பிரான்சைஸ் தொடங்குவதற்கு உரிய தகுதி மற்றும் எப்படி தொடங்குவது என்பது குறித்த விபரங்களை பின்வருமாறு காணலாம்.

பிரான்சைஸ் தொடங்குவதற்கான தகுதிகள்:

1. 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 18 வயது பூர்த்தி அடைந்துள்ள இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும்.

2. அவ்வாறு இருக்கும் பட்சத்தில் பிரான்சைஸ் தொடங்குவதற்கு உரிய படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

ஊதிய முறை விபரங்கள்:

1. ரெஜிஸ்டர் போஸ்ட் – ரூ.3
2. ஸ்பீட் போஸ்ட் – ரூ.5
3. ரூ.100 – 200 வரை மணியார்டர் – ரூ.3.50
4. ரூ.200க்கு மேல் மணியார்டர் – ரூ.5
5. 1000க்கும் மேற்பட்ட புக்கிங் & ஸ்பீட் போஸ்ட் – 20% கமிஷன்
7. போஸ்டல் ஸ்டாம்ப், அனைத்து எழுது பொருட்கள் மற்றும் பணம் ஆர்டர் – 5%
8. வருவாய் முத்திரை, மத்திய ஆள்சேர்ப்பு கட்டண முத்திரை விற்பனை – 40%

பிரான்சைஸ் தொடங்குவதற்கான வழிமுறை:

1. பிரான்சைஸ் தொடங்குவதற்கு தேவையான விண்ணப்பத்தை அஞ்சல் நிலையங்களில் இருந்து நேரடியாக அல்லது அஞ்சல் துறையின் அதிகாரபூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

2. விண்ணப்பதாரர்கள் பிரான்சைஸ் அவுட்லெட்டில் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளை விவரிக்கும் வணிகத் திட்டத்துடன் படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

3. விண்ணப்பம் தேர்ந்தெடுக்கப்படும் வகையில் அஞ்சல் துறையுடன் விண்ணப்பதாரர் ஒரு ஒப்பந்தத்தில் (MoA) கையொப்பமிட வேண்டும்.

4. இந்த விண்ணப்பம் பதிவு செய்யப்பட்ட 14 நாட்களில் அஞ்சல் கோட்ட தலைவர் உங்களது பிரான்ஸைசை உறுதி செய்துவிடுவார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!