பாக். முன்னாள் அதிபர் ஜெனரல் பர்வேஸ் முஷாரப் காலமானார் !!
பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் அவர்கள் நீண்ட நாட்களாக உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
உடல் நலக் குறைவு:
1999 முதல் 2008 ஆம் ஆண்டு வரை பாகிஸ்தானின் ஆட்சி பொறுப்பில் பர்வேஸ் முஷாரப் அவர்கள் இருந்தார். இந்நிலையில், கடந்த 2007 ஆம் ஆண்டு அரசியலமைப்பை இடைநிறுத்திய குற்றத்திற்காக முஷாரப் அவர்களுக்கு எதிராக தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் பெனாசீர் புட்டோ கொலை வழக்கு கொலை வழக்கில் முஷாரப் சம்பந்தப்பட்டிருப்பதாகவும், வேறொரு மதகுரு கொலை வழக்கில் முஷாரப்பிற்கு தொடர்பு இருப்பதாகவும் நிரூபிக்கப்பட்டு அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
“அக்னிபாத்” திட்டத்தில் ஆட்சேர்ப்பு முறை மாற்றம் – மத்திய அரசின் புதிய அறிவிப்பு!
இதனால் கடந்த 2016 ஆம் ஆண்டு அவர் துபாய் நாட்டிற்கு சென்று விட்டார். மேலும், அமிலாய்டோசிஸ் என்ற நோயினால் அவர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இதனால் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாகவும் முன்னதாக செய்திகள் வெளியாகியது. இந்த நோயினால் அவரது உடல் உறுப்புகள் செயலிழந்த நிலையில் இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் சார்பாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டது.
தற்போது 79 வயதாகியுள்ள உள்ள பர்வேஸ் முஷாரப் அவர்கள் தொடர்ந்து துபாயில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மருத்துவமனையில் உடல்நலக் குறைவினால் காலமானார் என்று செய்திகள் வெளியாகி உள்ளது.