தூக்கு மாட்டி தற்கொலைக்கு முயற்சி செய்த முன்னாள் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஐஸ்வர்யா – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

0
தூக்கு மாட்டி தற்கொலைக்கு முயற்சி செய்த முன்னாள் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ஐஸ்வர்யா - அதிர்ச்சியில் ரசிகர்கள்!
தூக்கு மாட்டி தற்கொலைக்கு முயற்சி செய்த முன்னாள் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ஐஸ்வர்யா - அதிர்ச்சியில் ரசிகர்கள்!
தூக்கு மாட்டி தற்கொலைக்கு முயற்சி செய்த முன்னாள் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஐஸ்வர்யா – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வந்த தீபிகா தற்போது தற்கொலைக்கு முயற்சி செய்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

விஜய் டிவி, சன் டிவி, ஜீ தமிழ் மற்றும் கலர்ஸ் தமிழ் ஆகிய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்தும் மக்களின் மத்தியில் அதிகமாக பிரபலமாகி வருகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த தொலைக்காட்சி சீரியல்களில் நடிப்பது மூலமாகவே சில நாட்களிலேயே ரசிகர்களின் மத்தியில் நடிகர்கள் மற்றும் நடிகைகள் பிரபலமாகி விடுகின்றனர். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலமாக எக்கச்சக்கமான ரசிகர்களை சம்பாதித்தவர் தான் தீபிகா. அதாவது இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் கண்ணனுக்கு ஜோடியாக நடித்துக் கொண்டிருந்தார்.

கிராமம் முழுதும் முழு ஊரடங்கு அமல் – அடுத்தடுத்து 5 பேர் பலி!

முகப்பருவின் காரணமாக சீரியலில் இருந்து வெளியேற்றப்பட்டார். கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் வரை மட்டுமே பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து இருப்பார். ஆனால், மூன்று மாதத்திலேயே எக்கச்சக்கமான ரசிகர்களின் ஆதரவைப் பெற்றார். மேலும் கண்ணன் மற்றும் தீபிகாவின் ஜோடி மக்களுக்கு அதிகமாக பிடித்துவிட்டது. மீண்டும் தீபிகாவை அறிமுகம் செய்யும்படி ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்த நிலையில் இருந்தனர். முகப்பரு பிரச்சனை சரி செய்த பிறகு மீண்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் அறிமுகமாவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், தற்போது தீபிகா கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சில்லுனு ஒரு காதல் என்கிற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த தொடரில் தூக்கு மாட்டி தற்கொலைக்கு முயற்சி செய்வது போன்ற ஒரு படப்பிடிப்பு நடத்தப்பட்டது. அப்போது தீபிகா தூக்குமாட்டி தற்கொலை செய்யும் படியாக எடுக்கப்பட்ட வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் பலரும் அந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளன. பின்புதான் இந்த வீடியோ சீரியலுக்காக எடுக்கப்பட்டது என்பதை அறிந்து தீபிகாவை கண்டபடி ரசிகர்கள் திட்டியுள்ளனர். அதாவது விளையாட்டாக கூட இந்த மாதிரியான வீடியோக்களை எடுக்க வேண்டாம் என ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here