SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – பிஷிங் மோசடி எச்சரிக்கை! பாதுகாப்பு வழிமுறைகள் இதோ!

0
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - பிஷிங் மோசடி எச்சரிக்கை! பாதுகாப்பு வழிமுறைகள் இதோ!
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - பிஷிங் மோசடி எச்சரிக்கை! பாதுகாப்பு வழிமுறைகள் இதோ!
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – பிஷிங் மோசடி எச்சரிக்கை! பாதுகாப்பு வழிமுறைகள் இதோ!

SBI வங்கி நிர்வாகம் தனது பயனர்களுக்கு ஃபிஷிங் மோசடி குறித்த சில எச்சரிப்புகளை கொடுத்ததோடு மட்டுமல்லாமல் அதிலிருந்து வாடிக்கையாளர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள சில வழிமுறைகளையும் அறிமுகம் செய்துள்ளது.

மோசடி எச்சரிக்கை

பாரத ஸ்டேட் வங்கி (SBI) ஃபிஷிங் மோசடியைப் பற்றி தனது பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. சமீப காலமாக வங்கி வாடிக்கையாளர்களை குறி வைத்து பல்வேறு மோசடி சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் இந்த மோசடி என்பது குறைந்தபாடில்லை. அதனால் வங்கி நிறுவனங்கள் இப்போது SMS மற்றும் அழைப்புகள் மூலம் தங்களது வாடிக்கையாளர்களை எச்சரித்து வருகிறது. குறிப்பாக, மோசடி செய்பவர்கள் வாடிக்கையாளர்களின் கேஒய்சி விவரங்களைப் புதுப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறார்கள்.

HDFC வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – Fixed Deposit வட்டியில் புதிய மாற்றம்!

இது போன்ற மோசடிகளுக்கு எதிராக எஸ்பிஐ, வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளது. இது குறித்து வங்கி நிர்வாகம் ட்விட்டரில் பகிர்ந்துள்ள விவரங்களின்படி, ‘SBI வாடிக்கையாளர்கள் தங்கள் KYC விவரங்களை போலியான SBI போர்ட்டலில் புதுப்பிப்பதற்காக +918294710946 மற்றும் +91-7362951973 ஆகிய இரண்டு எண்களிலிருந்து அழைப்புகள் மற்றும் செய்திகளை பெறுகின்றனர். அந்த வகையில் KYC புதுப்பிப்புக்கான ஃபிஷிங் இணைப்பைக் கிளிக் செய்யும்படி அவர்களிடம் கேட்க்கப்படுகிறது. இதுபோன்ற ஃபிஷிங் அல்லது சந்தேகத்திற்குரிய இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டாம் என்று அனைத்து எஸ்பிஐ வாடிக்கையாளர்களையும் கேட்டுக்கொள்கிறது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதற்கிடையில், எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் தங்கள் பான் கார்டு மற்றும் பிற விவரங்களை புதுப்பிக்குமாறு கேட்டு மோசடி செய்பவர்களிடமிருந்து வரும் செய்திகளின் ஸ்கிரீன் ஷாட்களையும் பகிர்ந்துள்ளனர். இவற்றில் இருந்து தப்பிக்க எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் இதுபோன்ற மோசடி இணைப்புகளை கிளிக் செய்து மோசடி செய்பவர்களுக்கு அவர்களின் தனிப்பட்ட தகவல்களை வெளிப்படுத்தாமல் இருப்பது நல்லது. அவ்வாறு செய்தால் மோசடி செய்பவர்கள், வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் கடின சம்பாதித்த பணத்தை ஏமாற்றிவிடுவார்கள் என்று எச்சரிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற ஃபிஷிங் தாக்குதல்களுக்கு எதிராக எஸ்பிஐ வங்கி முக்கிய வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளது. அதன் படி, உங்கள் தனிப்பட்ட அல்லது நிதித் தகவலைக் கேட்கும் அல்லது ஒரு தளத்தில் அவற்றைப் புதுப்பிக்கக் கேட்கும் எந்தவொரு தேவையற்ற மின்னஞ்சல், செய்தி அல்லது தொலைபேசி அழைப்பையும் பெறும்போது சந்தேகம் கொள்ளுங்கள். அந்த அழைப்புகள் அல்லது செய்திகளின் நம்பகத்தன்மையை சரிபார்க்க அதிகாரப்பூர்வ சேனல்கள் மூலம் உங்கள் வங்கியை நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம்.

ExamsDaily Mobile App Download

கணக்கு எண்கள், கடவுச்சொற்கள் அல்லது மோசடியாகப் பயன்படுத்தக்கூடிய முக்கியமான தகவல்கள் உள்ளிட்ட எந்தவொரு தனிப்பட்ட தகவலையும் குறுஞ்செய்தி மூலம் ஒருபோதும் வெளியிட வேண்டாம். மேலும், பாதுகாப்பான தளத்திற்கு உங்களைக் கொண்டு வருவதாகக் கூறும் மின்னஞ்சல் அல்லது செய்திகளில் உள்ள இணைப்புகளைக் கிளிக் செய்வதைத் தவிர்க்கவும். குறிப்பாக, இணையதளத்தின் முகவரியைப் பார்த்து, மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் இருந்து வேறு ஏதாவது காட்டுகிறதா என்பதையும் சரிபார்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!